தமிழில் பில்லா 2, அஞ்சான், துப்பாக்கி போன்ற படங்களில் வில்லனாக நடித்த வித்யூத் ஜாம்வால்-க்கு ஜோடியாக பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஸ்ருதிஹாசன்வ ஒப்பந்தமாகி உள்ளதாக தகல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என இந்திய மொழி படங்களில் மிகவும் பிஸியாக வளம் வந்தவர் ஸ்ருதிஹாசன். இவர் சமீபத்தல் சுந்தர்.C இயக்கத்தில் தயாராகவுள்ள "சங்கமித்ரா" படத்தில் நடிக்க ஒப்பந்தமானர். பின்னர் திடீரென இந்தப் படத்திலிருந்து வெளியேறினார். அதன் பின்னர் அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. 


இந்நிலையில் தற்போது பாலிவுட் நடிகர் வித்யூத் ஜாம்வால்-க்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகவுள்ளது. 


இன்னும் பெயர் வைக்கப்படாத இப்படத்தின் ஆரம்ப வேலைகள் அடுத்த மாதம் முதல் துவங்கும் என தெரிகிறது. இப்படத்தில் நஸ்ருதின் ஷா, அமோல் பலேகர் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது!