வியட்நாமில் வாலிபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவாறு குளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் குளித்து கொண்டே பயணம் செய்யும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 


வியட்நாம் நாட்டில் நடந்த வேடிக்கை சம்பவம் இது. அங்கு பின் டுவாங் மாகாணத்தில் ஹூய்ன்தன் கான் (வயது 23) என்ற வாலிபரும், இன்னொருவரும் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தனர். அவர்கள் இருவரும் மேலாடை அணிந்திருக்க வில்லை. மோட்டார் சைக்கிளில் அவர்கள் இருவருக்கும் மத்தியில் ஒரு வாளியில் தண்ணீரை வைத்துக்கொண்டனர்.



பின்னால் இருந்த நபர், வாளியில் இருந்து தண்ணீரை தன் மீது ஊற்றிக்கொண்டும், மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் மீது ஊற்றிக்கொண்டும் சென்றார். அவர்கள் தங்களுக்கு தாங்களே சோப்பும் போட்டுக் கொண்டனர். இப்படி அவர்கள் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவாறே குளித்துக்கொண்டு போனதை பார்த்த பலரும் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர்.