VIDEO: இளைஞனுக்கு நேர்ந்த துயரம்; ஆபத்தானது என எச்சரித்த இந்தியன் ரயில்வே
20 வயது இளைஞனுக்கு நேர்ந்த துயரம். வீடியோவைப் பார்த்தால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள்.
மும்பை: உள்ளூர் ரயிலில் ஸ்டண்ட் செய்த ஒரு இளைஞன் தன் உயிரை விலை கொடுக்க வேண்டியிருந்தது. மும்பையில் (Mumbai) உள்ளூர் ரயிலில் பயணம் செய்யும் போது தொங்கிய படி ஸ்டண்ட் செய்து வந்த ஒரு இளைஞன் மின் கம்பத்தில் மோதி இறந்தார். அந்த இளைஞன் தனது உறவினருக்கு துணி வாங்க மும்பைக்கு வந்ததாக கூறப்படுகிறது. அவர் கல்யாண் ஸ்டேஷனில் இருந்து மும்பை CST க்குச் செல்லும் உள்ளூர் ரயிலில் (Local Train) ஏறியுள்ளார். அவர் ரயிலில் தொங்கியப்படி ஆபத்தான நிலையில் ஸ்டண்ட் செய்து வந்தார். அதை ரயிலின் உள்ளே இருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வந்தார். திடிரென அந்த இளைஞன் மீது மின்கம்பம் மோதி, அவர் உள்ளே தூக்கி வீசப்படுகிறார். அதிர்ச்சியைத் தரும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் அதிகளவில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவத்தின் முழு வீடியோவையும் ரயில்வே அமைச்சகம் (Railway Ministry) தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "இதுபோன்ற ஸ்டண்ட் செய்வது சட்டவிரோதமானது என்றும், அது ஆபத்தானது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த வீடியோவில், தில்ஷன் என்ற இளைஞன் மும்பை உள்ளூர் ரயிலுக்கு வெளியே தொங்கபடி ஸ்டண்ட் செய்து கொண்டிருந்ததாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. பின்னர் அந்த இளைஞன் வழியில் இருந்த மின் தூணில் மோதி விபத்துக்குள்ளானான். இந்த சம்பவம் டிசம்பர் 26 அன்று நடைபெற்றது.
உங்கள் பாதுகாப்பைப் பொருட்படுத்தாமல், ரயிலின் வாசலில் நின்றுக்கொண்டு தொங்குவது, நகரும் ரயிலில் ஏறுவது போன்ற சம்பவங்களில் ஈடுபட வேண்டாம் என்றும், அதனால் விபத்து ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது