இன்றைய வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் வன விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாம்புகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம். நாகப்பாம்பு வீடியோக்கள் மீது இணையவாசிகளுக்கு எப்போதுமே ஒரு கிரேஸ் உள்ளது. மனிதர்களை அதிக அளவில் கவர்ந்த உயிரினங்களில் பாம்புகளுக்கு முக்கிய இடம் உள்ளது. அவை உலகின் மிக அஞ்சப்படும் உயிரினங்களில் ஒரு உயிரினமாக கருதப்படுகின்றன. மேலும் விலங்குகளை வேட்டையாடும் மற்றும் சண்டையிடும் வீடியோக்கள் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகின்றன. அதே நேரத்தில், இதில் பெரும்பாலான வீடியோக்கள் ராஜ நாகப்பாம்பை தொடர்புடையதாக தான் இருக்கும். இவை எதிலில் வேட்டையாடும் திறன் கொண்டவை. ஆனால் இந்த முறை சற்று வித்தியாசமாக ஒன்று நடந்துள்ளது. இங்கு 15 அடி கொண்ட அரச நாகப்பாம்பு ஒன்று ஆதரவற்ற நிலையில் இருந்ததாகவும், அதற்கு 5 நாய்கள் தான் காரணம் எனவும் வீடியோ மூலம் தெரிகிறது. மேலும் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.


மேலும் படிக்க | Viral Video: குசும்பு பிடிச்ச குட்டி யானைப்பா இது... ஒரு இடத்துல நிக்க மாட்டியா...!!


உண்மையில், தற்போது ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகிறது, அதில் 15 அடி அரச நாகப்பாம்பு சிக்கலில் காணப்படுகிறது. மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படும் 15 அடி கொண்ட அரச நாகப்பாம்பு இம்முறை நாய்களை எதிர்கொண்டது ஆச்சரியமான விஷயமாகும்.  ஏனெனில் அந்த நாய்கள் ஒன்றல்ல இரண்டல்ல 5 நாய்கள் ஆகும், மேலும் அந்த நாய்கள் அரச நாகப்பாம்பை எதிர்கொள்கிறது.


5 நாய்களால் சூழப்பட்ட ராஜ நாகப்பாம்பு
இந்த ஐந்து நாய்கள் இந்த ராஜா நாகப்பாம்பை எல்லா பக்கங்களிலும் சுற்றி வளைத்து, அதை தூக்கி அடிப்பதைக் காணலாம். இது மட்டுமின்றி, நாய்கள் ஒன்றுடன் ஒன்று பிடிக்க ராஜ நாகப்பாம்பை இழுத்துச் செல்கின்றன. ராஜ நாகப்பாம்பு நீண்ட நேரம் போராடி வருகிறது, ஆனால் 5 நாய்களுக்கு முன்னால் தோல்வியை ஏற்றுக்கொண்டது அந்த ராஜ நாகப்பாம்பு. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


நாய்கள் மற்றும் ராஜ நாகப்பாம்பு எதிர்கொள்ளும் வீடியோவை இங்கே காணுங்கள்:



யூடியூப்பில் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டது
ராஜ நாகப்பாம்பின் தோல்வியின் இந்த வீடியோ தி வைல்ட் நேச்சர் என்ற யூடியூப் சேனலில் இருந்து பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இதுவரை 16 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்த வீடியோ மிகவும் பழையது ஆனால் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் பலர் இந்த வீடியோவுக்கு பலவித கமெண்ட்களை செய்து வருகின்றனர்.


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | பீகாரில் துப்பிய குட்காவை நக்கி சுத்தம் செய்யுமாறு அடித்த ஜவான் - இணையத்தில் வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ