லக்னோ: 8 முதல் 10 வயதுடைய குழந்தைகள் பைக் சவாரி செய்வதைப் பார்த்தீர்களா? ஆச்சரியம் என்னவென்றால், உத்தரபிரதேசத்தின் (Uttar Pradesh) தலைநகரில் (Lucknow) தற்போது சமூக ஊடங்களில் ஒரு வீடியோ வைரலாகி (Video Viral) வருகிறது. அந்த வீடியோவில் ஒரு குழந்தை பைக் சவாரி செய்கிறது. வீடியோ வைரலாகியதை அடுத்து காவல்துறையினர் நடவடிக்கையில் இறங்கினர். போக்குவரத்து எஸ்.பி. குழந்தையின் தந்தைக்கு இ-சலான் (E-Challan) அனுப்பி உள்ளார். மேலும் குழந்தையின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபி ஓ.பி.சிங் அறிவுறுத்தியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தகவல்களின்படி, இந்த பைக் ககோரியின் பால் வணிகம் செய்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிய வாகனச் சட்டப்படி, ஒரு மைனர் வாகனம் ஓட்டினால், பெற்றோர் அல்லது வாகன உரிமையாளர் மீது குறைந்தது 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் இது தவிர, மூன்று மாத சிறைத் தண்டனையும் வழங்கப்படலாம் என உள்ளது.


 



வீடியோ வைரலானதும் போலீசார் பைக் உரிமையாளரைத் தேடத் தொடங்கினர். வாகன எண்ணின் அடிப்படையில், தற்போதுள்ள புதிய சட்ட விதியின் கீழ் ரூ.11500 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.