ஐரா-ன் கடைசி நாள் சூட்டிங்கில் எடுக்கப்பட்ட நயனின் வைரல் போட்டோ!
சர்ஜுன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவான ஐரா படத்தின் படப்பிடிப்பின் கடைசி நாளில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
சர்ஜுன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவான ஐரா படத்தின் படப்பிடிப்பின் கடைசி நாளில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
‘இமைக்கா நொடிகள்' படத்துக்கு பிறகு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கைவசம் அஜித்தின் ‘விஸ்வாசம்', சக்ரி டோலட்டியின் ‘கொலையுதிர் காலம்', நிவின் பாலியின் லவ் ஆக்ஷன் டிராமா, சிரஞ்சீவியின் ‘சைரா நரசிம்ஹா ரெட்டி', மகேஷ் வெட்டியாரின் ‘கோட்டயம் குர்பானா', அறிவழகன் படம், சர்ஜுனின் ஐரா, சிவகார்த்திகேயன் படம், விஜய் படம் என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது.
இதில் ‘ஐரா' நயன்தாராவின் கேரியரில் 63-வது படமாகும். ஹாரர் ஜானரில் உருவாகும் இதனை ‘KJR ஸ்டுடியோஸ்' நிறுவனம் சார்பில் கோட்டப்பாடி. ஜே.ராஜேஷ் தயாரிக்கிறார். நயன்தாரா டபுள் ஆக்ஷனில் நடிக்கும் இந்த படத்திற்கு ‘8 தோட்டாக்கள்' புகழ் கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்து வருகிறார்.
சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வந்தது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் தற்போது ஐரா படத்தின் படப்பிடிப்பின் கடைசி நாளில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.