இசைநிகழ்ச்சியில் கிடைக்கும் வருவாயை நிவாரண நிதியாக வழங்கும் AR.ரஹ்மான்
டிசம்பர் 24 ஆம் தேதி டொரோண்டோவில் நடக்கவுள்ள இசைநிகழ்ச்சியில் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதி கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்கப்படுவதாக ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட்...!
டிசம்பர் 24 ஆம் தேதி டொரோண்டோவில் நடக்கவுள்ள இசைநிகழ்ச்சியில் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதி கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்கப்படுவதாக ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட்...!
கடந்த நவம்பர் 15-ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. கஜா புயலில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கோர தாண்டவத்தில் சுமார் 1,70,000 மரங்கள், 1,17,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளதுவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
புயல் கரையை கடந்த பின்னர் நிவாரணப் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. எனினும் சில பகுதிகளில் போதுமான வசதிகள் இன்னும் வந்த சேரவில்லை என மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டுவர தமிழ்த்திரையுலகினரும் தங்களால் ஆன உதவிகளைச் செய்து வருகின்றனர். விஜய், ரஜனி, சூர்யா, கார்த்தி, ஜோதிகா, சிவகுமார், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி உள்ளிட்ட நடிகர்கள் நிதி வழங்கி உள்ளனர். மேலும் சங்கர், வைரமுத்து உள்ளிட்டோரும் நிவாரண நிதி வழங்கியுள்ளனர். இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் டிசம்பர் 24 ஆம் தேதி டொரோண்டோவில் நடக்கவுள்ள இசைநிகழ்ச்சியில் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை கஜா புயல் நிவாரண நிதியாக வழங்க உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகார்ப்போர்வமாக தெரிவித்துள்ளார்.