முதல் வகுப்பு ஏசி பயணிக்கு நேர்ந்த பரிதாப நிலை... பெட்டியை கடித்து குதறிய எலிகள்..!!
முதல் வகுப்பு ஏசி காண கட்டணம் விமான டிக்கெட் கட்டணத்திற்கு இணையாக இருக்கும். ஆனால் அதில் உள்ள வசதிகளும் பாதுகாப்பு அம்சங்களும் சிறப்பானதாகவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு இருப்பது நியாயம்தான்.
ரயில் பயணம் என்பது, ஏழை எளியவர்கள், நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமல்லாது, உயர்தர வகுப்பினருக்கும் ஏற்ற போக்குவரத்து முறையாக உள்ளது என்றால் மிகையில்லை. இந்திய ரயில்வே என்பது, உலகின் நான்காவது பெரிய நெட்வொர்க்காக உருவெடுத்துள்ளதோடு, நாட்டின் மூளை முடுக்குகளை இணைக்கும் சிறந்த போக்குவரத்து அமைப்பாக உள்ளது. தினமும் கொடி கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர்.
ரயிலில், ஏழை எளியவர்களுக்கு ஏற்ற வகையில், ஸ்லீப்பர் கோச்சுகள் உள்ளன. இதில் பயணம் செய்வதற்கு ஆகும் கட்டணம் மிகக் குறைவாகவே இருக்கும். இவை ஏசி வசதி இல்லாத சாதாரண பெட்டிகள். அதே சமயம் வசதி படைத்தோர், பயன்படுத்த ஏதுவாக ஏசி பெட்டிகளும் ரயில் இருக்கும். அதிலும் மூன்று வகையான வகுப்புகள் உண்டு. 3 ஏசி, 2 ஏசி மற்றும் முதல் வகுப்பு ஏசி என பிரிவுகள் உண்டு. முதல் வகுப்பு ஏசி காண கட்டணம் விமான டிக்கெட் கட்டணத்திற்கு இணையாக இருக்கும். ஆனால் அதில் உள்ள வசதிகளும் பாதுகாப்பு அம்சங்களும் சிறப்பானதாகவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு இருப்பது நியாயம்தான். ஆனால் முதல் வகுப்பு ஏசியில் பயணம் செய்த ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவம், மிகவும் மோசமானதாக ஆகிவிட்டது.
ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் வண்டியின் ஏசி முதல் வகுப்பில் பயணம் செய்த ஒருவர், தனது மோசமான அனுபவத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். கொல்கத்தா மற்றும் மும்பை இடையிலான இந்த ரயிலில் பயணம் செய்தவர், தனது பெட்டியை எலிகள் பதம் பார்த்து விட்டதாக பதிவிட்டுள்ளார். கடந்த மே மாதம் 19ஆம் தேதி, ரயில் வண்டி எண் 12102 -ல் ஏசி முதல் வகுப்பான H1 பெட்டியில் A-2 இருக்கையில் (PNR 6535087042) பயணம் செய்தவர் வெட்டியினை எலி கடித்து குதறி உள்ளது. மேலும் இதைப்பற்றி புகார் அளிக்க, அவர் டிக்கெட் பரிசோதரை அணுக முயற்சி செய்தபோது, அரை மணி நேரத்திற்கு அவரால் புகார் அளிக்க முடியவில்லை என பதிவிட்டுள்ளார்.
ரயில் பயணிகளின் சமூக வலைதள பதிவுக்கு பதிலளித்துள்ள ரயில்வேசேவா "உங்கள் பிரச்சனையை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம் & விரைவில் உதவ விரும்புகிறோம். உங்கள் மொபைல் எண் தேவைப்படும்.உங்கள் பிரச்சனையை நீங்கள் நேரடியாக railmadad.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் தெரிவிக்கலாம் அல்லது விரைவான தீர்வுக்காக 139 ஐ டயல் செய்யலாம்” என்று பதிவிட்டுள்ளது.
பயணியின் சமூக வலைதள பதிவு, மிகவும் வைரலாகி ரயில்வே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலவிதமான கருத்துக்களை தெரிவித்தனர். மிகச் சிறந்த சேவை செய்வதாக கூறும் ரயில்வே, பயணிக்கு இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சேவைகளின் குறைபாடு ஏற்பட்டுள்ளதன் காரணமாக இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இந்திய ரயில்வேயில் சுகாதாரம் மற்றும் தூய்மை தரங்கள் இல்லாததால் ஏற்பட்ட வேதனை, அதிர்ச்சி மற்றும் சிரமத்திற்கு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | Viral Video: பாசக்கார பய போலிருக்கு.... புறாவுக்காக வாயை கொடுத்த ‘பாரி’ வள்ளல்...!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ