75 இன்ச் ஸ்மார்ட் டிவியை விளையாட்டு பொருளாக்கிய குழந்தை; பதறிப்போன தாய் செய்த காரியம்
75 இன்ச் ஸ்மார்ட் டிவியை குழந்தை ஒன்று விளையாட்டு பொருளாக மாற்றியதை பார்த்து தாய் செய்த காரியம் வைரலாகியுள்ளது.
வீட்டில் குழந்தைகள் இருந்தாலே சேட்டைகளுக்கும் சுட்டித் தனங்களுக்கும் பஞ்சம் இருக்காது. அவர்கள் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் மிகப்பெரிய கோபத்தை வரவழைத்தாலும், பிறகு யோசித்து பார்த்தால் நகைப்பு அளவில்லாமல் வழிந்தோடும். அந்தளவுக்கு அவர்களின் செய்கை இருக்கும். அவர்களின் சின்ன செய்கைகள் சில வாழ்நாள் முழுவதும் யோசித்து பார்க்கும் வகையில் கூட இருக்கும். அவர்களின் விளையாட்டு தனம் கள்ளம் கபடமில்லாமல் இருக்கும். அது இது எது என எதுவும் அவர்களுக்கு தெரியாது.
அவர்களுக்கு தெரிந்த ஒரே விஷயம் அழுகை, விளையாட்டு, சிரிப்பு. இதனால் தான் குழந்தைகளை ரசிக்க வேண்டும் என்று பெரிய பெரிய எழுத்தாளர்கள் மற்றும் மனோதத்துவ நிபுணர்கள் கூட கூறுகிறார்கள். கடினமான காலங்களில் குழந்தைகளுடன் நேரம் செலவிட்டால், எத்தகைய பிரச்சனையையும் சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும் எனவும் மனோதத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். வீட்டில் குழந்தைகள் இல்லாவிட்டால், மொபைலில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் வீடியோ இருக்கின்றன. அவற்றை பார்த்து உங்களை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும். அப்படியான வீடியோ ஒன்றை நீங்கள்தேடுகிறீர்கள் என்றால், இதோ இங்கே இருக்கும் வீடியோ நிச்சயம் உங்களை குதூகலப்படுத்தும்.
வீட்டில் புதியதாக வாங்கி வைத்திருந்த 75 இன்ச் ஸ்மார்ட் டிவியை குழந்தை ஒன்று விளையாட்டு பொருளாக மாற்றியிருக்கிறது. கீழே வைக்கப்பட்டிருந்த அந்த டிவி மீது ஏறி அமர்ந்ததுடன், தன்னுடைய விளையாட்டு பொருட்களை எல்லாம் அதன் மீது வைத்து தகிடு தத்தம் போட்டுவிட்டது. இதனை பார்த்த குழந்தையின் தாய்க்கு, நெஞ்சு பதைபதைத்து போனது. வேகமாக குழந்தையை அடிக்க அந்த தாய் ஓடுவதற்கு முன், குழந்தை அதனை கவனித்து அங்கிருந்து ஓடுகிறது. காண்பதற்கே செம காமெடியான வீடியோவாக இருப்பதால் நெட்டிசன்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ