மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ட்விட்டர் கணக்கு தற்போது BlueTick வாங்கி அதிகாரப்பூர்வ கணக்காக உருவெடுத்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, அந்த கதைக்கு ஏற்ற தோற்றத்தில் நடிப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. திரைத்துறையின் அடியெடுத்து வைத்து பல சோதனைகளை இவர் கண்டு முன்னேறியுள்ளார். ஆரம்பகாலத்தில் பல கஷ்டங்களை இவர் கண்டிருந்தாலும், தனது திறமையால் பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளளார். இந்த வகையில் தற்போது இவர் ரஜினியின் நடிப்பில் உருவாகவுள்ள பேட்ட திரைப்படத்திலும் வில்லனாக நடிக்கவுள்ளார்.


இந்நிலையில் தற்போது இவரது சமூக வலைதள கணக்கான ட்விட்டர் கணக்கு அதிகாரப்பூர்வ கணக்காக மாற்றப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ட்விட்டர் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்து நடிகர் விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...