சீவோர்ல்ட் ஆர்லாண்டோவில் டால்பின் ஒன்று தனது இரண்டு பயிற்சியாளர்களை முத்தமிடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

21 வயதான இந்த டால்பீன் பெயர் டியாகோ என்று அறியப்படுகிறது. சீவோர்ல்டில் பிறந்த இந்த டால்பீன் தற்போது இணைய வாசிகளின் செல்ல பிராணியாக உருமாறியுள்ளது.


இந்த டால்பீனின் பயிற்சியாளர் Ashley Orcutt தனது பேஸ்புக் பக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வீடியோ ஓன்றினை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் Ashley Orcutt மற்றும் அவரது இணை பயிற்சியாளர் Tiffany இருவரும் டால்பினுடன் வேடிக்கையாக விளையாடுகின்றனர்.



அப்போது இந்த டால்பீன் இவர்கள் இருவருக்கும் மாறி மாறி முத்தம் அளிக்கின்றது. இந்த வீடியோவினை Ashley Orcutt மகிழ்ச்சியாக தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.


ஆறு மாதங்களுக்கு முன்பாக இந்த வீடியோ இணையத்தில் பதிவேற்றப்பட்டு இருந்தாலும், தற்போது இந்த வீடியோ சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாக பரவி வருகின்றது.


தற்போது வரையில் இந்த வீடியோ 26 மில்லியல் பார்வையாளர்கள் மற்றும் 6 மில்லியல் பகிர்வுகளை பெற்றுள்ளது. மேலும் 124 ஆயிரம் லைக்ஸ்களையும் குவித்துள்ளது.