சுமார் 850 விவசாயிகளின் பயிர்க்கடன்களை செலுத்துவதாக நடிகர் அமிதாப் பச்சன் அறிவித்துள்ளார்...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரப்பிரதேச மாநிலத்தின் 850 விவசாயிகளின் பயிர்க்கடன்களை செலுத்துவதாக நடிகர் அமிதாப் பச்சன் அறிவித்துள்ளார். இதற்காக இவர் சுமார் ஐந்தரை கோடி ரூபாய் நிதியை இதற்காக ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 


விவசாயிகள் கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை செய்துக் கொள்ளும் அவலமான சூழலை மாற்ற மிகுந்த வறுமையில் வாடும் 850 விவசாயிகளை கடன் கொடுத்த வங்கிகளின் உதவியுடன் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ள அமிதாப் பச்சன் இது குறித்து பேசுகையில், ‘நாட்டுக்காக உயிர்நீத்த 44 வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குவது மிகவும் திருப்திகரமான அனுபவமாக உள்ளது. மேலும், மகாராஸ்டிராவைச் சேர்ந்த 112 ஏழ்மையான குடும்பங்களுக்கும் நாங்கள் உதவி செய்யவுள்ளோம். இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் இதுபோன்ற ஏழ்மையானவர்களை கண்டறிய வேண்டும்’ 


மேலும், இணையத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடன் பிரச்னையால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க நாங்கள் அவர்களின் கடன்களை செலுத்த உள்ளோம். இதற்காக உத்தரப்பிரதேசத்தில் உள்ள 850 விவசாயிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் சார்பாக சுமார் 5.5 கோடி ரூபாய் மதிப்புள்ள பணத்தைச் செலுத்தவுள்ளோம். இது தொடர்பாக வங்கியுடன் பேசியுள்ளோம். முன்னதாக மகாராஸ்டிராவைச் சேர்ந்த 350 விவசாயிகளின் கடன்களும் செலுத்தப்பட்டுள்ளது” எனப் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.