பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்பின் எடிட் செய்யப்பட்ட படம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் தீயாய் பரவி வருகிறது. "தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி AI மூலம் தென்னிந்திய நடிகை ரஷ்மிகா மந்தனாவின் மார்பிங் வீடியோ கடந்த சில நாட்களாக வைரல் ஆகி வருகிறது. இதற்கு பலரும் கண்டனங்களை பதிவு செய்து இருந்தனர்.  ராஷ்மிகா மந்தனா இந்த வீடியோவிற்கு கோபத்தையும், வருத்தத்தையும் தெரிவித்தார். "இதைப் பகிர்வதில் நான் மிகவும் வேதனைப்படுகிறேன், மேலும் தற்போது ஆன்லைனில் பரப்பப்படும் இந்த வீடியோ பற்றி நான் பற்றி பேச வேண்டும். இதுபோன்ற ஒன்று எனக்கு மட்டுமல்ல, தொழில்நுட்பம் இவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுவதால் இன்று மிகவும் தீங்கு விளைவிக்கும் இன்று, ஒரு பெண்ணாகவும், ஒரு நடிகையாகவும், எனது பாதுகாப்பு மற்றும் ஆதரவு அமைப்பாக இருக்கும் எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதை ஒரு சமூகமாகவும் அவசரமாகவும் நாம் கவனிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | உண்மையில் இந்த வீடியோவில் இருப்பது யார்? வெளியானது மர்மம்!


மேலும், பாலிவுட் நட்சத்திரமான கத்ரீனா கைஃப் நடப்பில் 'டைகர் 3' படம் விரைவில் வெளியாக உள்ளது.  இந்நிலையில், இந்த படத்தின் சண்டைக் காட்சியிலிருந்து கத்ரீனா கைஃப் மார்பிங் செய்யப்பட்ட படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.  சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வந்த புகைப்படம், அடுத்த சில மணிநேரங்களில் சமூக ஊடகங்களில் இருந்து நீக்கப்பட்டது. AI (செயற்கை நுண்ணறிவு) பயன்படுத்தி இவ்வாறு மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வீடியோக்கள் மற்றும் படங்களில் தனிநபர்களின் முகங்களை எளிதாக மாற்றலாம் என்பதை இப்படி தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.  இவ்வாறு நடப்பது, சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.  



சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை இந்த சம்பவங்கள் நினைவுபடுத்துகின்றன.  இந்த அடுத்தடுத்த சம்பவங்கள் இந்தியா முழுவதும் பேசு பொருளானது.  தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், கடந்த திங்களன்று X தளத்தில், "இது போன்ற ஆழமான போலி வீடியோக்கள், தவறான தகவல்கள் மிகவும் ஆபத்தானவை, இவற்றை சரியான முறையில் கையாள வேண்டும்" என்று எச்சரித்தார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் இது ஒரு முக்கிய பிரச்சனை என்று கூறினார்.  இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் புகாரைப் பெற்ற 24 மணி நேரத்திற்குள் மார்பிங் செய்யப்பட்ட படங்களை அகற்றுமாறு எக்ஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடக தளங்களையும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.  



மேலும் படிக்க | ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ: நடந்தது என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ