துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜித் கலந்து கொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திரைத்துறையில் மட்டுமல்லாம்  கார் ரேஸ், ஃபோட்டோகிராபி, ஆளில்லா விமானங்களை தயாரிப்பது போன்றவற்றிலும்  அதிக ஆர்வம் காட்டி வருகிறார் தல அஜித். இதற்கிடையே விஸ்வாசம் திரைப்படம் முடிந்த கையோடு துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்து வந்த அஜித், மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில்  10 எம். ஏர் பிஸ்டல் போட்டியில் சென்னை ரைபில் கிளப் சார்பாக திரைப்பட நடிகர் அஜித் குமார் கலந்து கொண்டார்.


கோயம்பத்தூரில் நடைபெற்று வரும் மாநில அளவிலான 45-வது துப்பாக்கிச் சூடு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். தல அஜித் நடிப்பது மட்டுமின்றி ரேஸ் உள்ளிட்ட மற்ற சில விஷயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் ஏரோ மாடலிங், போட்டோகிராபி என அடிக்கடி புதிது புதிதாக செய்கிறார். 


சமீப காலமாக அஜீத் துப்பாக்கி சுடும் பயிற்சியும் எடுத்து வருகிறார். அதன் புகைப்படங்களும் அடிக்கடி வெளியாகின. இந்நிலையில் இன்று அஜித்தின் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலானது. இந்நிலையில் துப்பாக்கிச் சூடு பயிற்சி பெற்றது கோயம்பத்தூரில் நடைபெற்று வரும் தமிழ்நாடு அளவிலான 45-வது துப்பாக்கிச் சூடு போட்டியில் பங்கேற்பதற்காக பயிற்சி பெற்றுள்ளார். 


இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.