முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது காதலர் நிக் ஜோனாஸுடன் கலந்துக் கொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முகேஷ் மற்றும் நீடா அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கும், ஷ்லோகா மேத்தாவிற்கு நேற்று நிச்சயதார்த்திற்கு முந்தைய விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஷாரூக்கான், கௌரி கான், ரன்பீர் கபூர், ஆலியா பட், அயன் முகர்ஜி, கரண் ஜோஹர், சச்சின் டெண்டுல்கர், அஞ்சலி டெண்டுல்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


இந்நிலையில், நேற்று நடந்த ஆகாஷ் அம்பானியின் திருமண நிச்சயதார்த்த விழாவில் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது காதலர் நிக் ஜோனாஸுடன் கலந்துக் கொண்டார்.







(Pic Courtesy: Yogen Shah)


நடிகை பிரியங்கா சோப்ராவும், பாப் பாடகர் நிக் ஜோனாஸும் பொது இடங்களில் அவ்வப்போது சுற்றி வருவதால், இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் வரும் நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் ஜோடியாக விழாவில் கலந்துக் கொண்டனர்.