வன வாழ்க்கையே வாழ்வா சாவா போராட்டம் நிறைந்ததது தான். அதிலும் சிறுத்தை போன்ற விலங்குகளிடம் சிக்கினால், தப்பிப்பது மிகவும் கடினம். இணையத்தில் எண்ணிலடங்காத வீடியோக்கள் பகிரப்பட்டாலும், வன வேட்டை தொடர்பான வீடியோக்கள் எளிதில் வைரலாகும். அந்த வகையில், செங்குதான மலையில் சிறுத்தை நடத்திய வேட்டை வீடியோ, அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது. செங்குத்தான மலையில் ஒரு பனிச் சிறுத்தை மின்னல் வேகத்தில் ஆட்டை வேட்டையாடிய வீடியோ டிவிட்டரில் பகிரப்பட்ட நிலையில், அதனை ஏராளமானோர் ரசித்து பார்த்து பாராட்டி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வீடியோவை வனவிலங்கு புகைப்படக் கலைஞர் வேதாந்த் திட் படம் பிடித்துள்ள நிலையில், ட்விட்டர் பயனர் வனத்துறை அதிகாரி பர்வீன் கேஸ்வான் இதனை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவைப் பகிர்ந்து, “மிகவும் செங்குத்தான மலைகளில் நாங்கள் இரையை வீழ்த்துவது இப்படித்தான்… கீழே உலா வருவது இரையை வீழ்த்துவதற்கு மட்டுமே.... ஒரு அரிய இயற்கை வரலாற்று தருணத்தை கேமராவில் படம்பிடித்துள்ளோம்... பனிச்சிறுத்தை லடாக்கில் காட்டு ஆடுகளை வேட்டையாடும் வீடியோ பதிவு” என குறிபிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.


சிறுத்தை வேட்டையின் வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்:


 



 


பனிச்சிறுத்தை (Snow leopard) என்பது பெரிய பூனை வகையைச் சேர்ந்த விலங்கு. பனிமலைச்சூழலில் வாழ்வதற்கேற்ப பனிச்சிறுத்தைகள் பல்வேறு மாற்றங்களை ஏற்றுகொண்டிருக்கின்றன. பருத்த உடலைக் கொண்டிருக்கும் இவற்றின் ரோமங்கள் அடர்த்தியாக இருக்கும். இவற்றின் நிறம், சில இடங்களில் வெள்ளையுடன் கூடிய, புகைபோன்ற சாம்பல் நிறத்திலிருந்து மஞ்சள் கலந்த பழுப்பு நிறம் என மாறுபட்டு காணப்படும். இவற்றின் தலையில் கரும்பழுப்பு நிறத்திலான சிறிய புள்ளிகளும், அவற்றின் கால்கள் மற்றும் வாலில் அதே நிறத்தில் பெரிய புள்ளிகளும், உடலில் கரும்பழுப்பு, கருப்புநிற புள்ளிகளும் காணப்படுகின்றன.


மேலும் படிக்க | Viral Video: மெஸ்ஸியை மிஞ்சும் ‘மியாவ்’... பூனைகளின் அசத்தலான புட்பால் மேட்ச்!


கிழக்கு ஆப்கானித்தான், இமயமலை மற்றும் திபெத்திய பீடபூமியிலிருந்து தெற்கு சைபீரியா, மங்கோலியா மற்றும் மேற்கு சீனா வரை சுமார் 9,800 அடி முதல் 14,800 அடி உயர மலைப்பகுதிகளில் அல்பைன் மற்றும் சபால்பைன் மண்டலங்களில் வாழ்கிறது. பனிச்சிறுத்தை பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் அழிவாய்ப்பு இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. ஏனெனில் உலகளாவில் இதன் எண்ணிக்கை 10,000க்கும் குறைவாக உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதன் எண்ணிக்கை 2040ம் ஆண்டில் மேலும் 10% குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | Viral Video: வேணாம்.. என் கிட்டே வச்சுக்காதே... சீண்டிய முதலையை துவம்சம் செய்த யானை!


மேலும் படிக்க | Viral Video: மயக்கும் நடனத்தால் காதலிக்கு தூது விடும் காட்டுக் கோழி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ