சமூக ஊடக உலககில் என்னிலடங்காத ஆச்சரியமான விஷயங்களைக் காணலாம். அதில் தினமும்,  நம்மை ஆச்சர்யத்தை கொடுக்கக் கூடிய அல்லது வியப்பை அளிக்கக் கூடிய, அல்லது பயத்தில் உறையக் கூடிய என ஏராளமான வீடியோக்கள் பார்க்கப்பட்டு , பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடல் நீர் நாய் ஒன்று மிக நேர்த்தியாக  வாலிபால் விளையாடும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. தற்போது கடல் நீர் நாய் விளையாடும் இந்த வீடியோ இணையவாசிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அளவில் சிறியதாக உள்ள கடல் நீர் நாய் ஒரு தோட்டாவைப் போல் நீரை பாய்ந்து அங்கும் இங்கும் சுழன்று விளையாடும் காணொளி, உங்களை நிச்சயம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வைரலாகும் கடல் நீர் நாய் வீடியோவில், நீர் நாய் ஒன்று, பெரிய நீச்சல் குளத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடைப் பந்து போன்ற அமைப்பில், மிக நேர்த்தியாக, பந்தை பிடித்து, சுழன்று சுழன்று அழகாக கூடைக்குள் போடுகிறது. மிக நேர்த்தியாக அது பந்தை போடும் விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த வைரல் வீடியோ, பகிரப்பட்ட உடனேயே அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.


வைரலாகும் இந்த வீடியோவை கீழே காணலாம்:


 



 


நீர் நாய் ஊன்உன்னி வகையைச் சேர்ந்த பாலூட்டியாகும். ஆற்று நீர்நாய்கள், கடல் நீர்நாய்கள் என்று இவற்றில் இரண்டு வகைகள் உண்டு. இவை நீரில் நீந்தும், தலைகுப்புற டைவ் அடிக்கும் ஆற்றல் கொண்டவை. தண்ணீருக்குள் 8 நிமிடங்கள்வரை மூழ்கி இருக்கும் திறன் கொண்டவை. நிலத்தில் மணிக்கு 29 கி.மீ., வேகத்தில் நடக்கும். இதனுடைய வாழ்நாள் 8 முதல் 9 ஆண்டுகள் ஆகும். பிறந்து 2 ஆண்டு முதல் குட்டிகள் போட தொடங்கும். பிறந்து 2 மாதத்தில் நீரில் நீந்தத் தொடங்குகிறது.


கடல், ஆற்றோரம், முகத் துவாரப்பகுதிகளில் மட்டுமே வாழும் இந்தப் பாலூட்டிகள் 14 முதல் 45 கிலோ வரை எடை கொண்டவையாக இருக்கும். ஆற்று நீர் நாய்கள், கடலில் வாழும் நீர் நாய்களோடு ஒப்பிடும் போது அளவில் சிறியவை. உடலின் மேல் போர்வை போல் வளர்ந்துள்ள ரோமமும், தடிமனான தோலும் இவற்றின் சிறப்பாகும். இவை பெரும்பாலும் நீரில் தனது வாழ்நாளைக் கழித்தாலும், தரைப்பகுதிகளில் நடந்தும் தனது பொழுதுகளை போக்கும் வழக்கம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. நீர் நாய்  வீடியோ சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும், இது மிகவும் ரசிக்கும் படியும் இருக்கிறது என்றால் மிகையில்லை. இதனை மீண்டும் மீண்டும் பார்க்கவும் தோன்றுகிறது. 


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | இறந்த தாயை எழுப்பும் குட்டி குரங்கு: இணையத்தை அழவைத்த இழப்பு.... வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ