எமனை ஏமாற்றி தப்பிப் பிழைப்பது என்பதெல்லாம் எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் கிட்டிவிடாத பிரபஞ்ச ரகசியம். ஆனால், ஒரு சிலருக்கு ஒரு சில நேரங்களில் அப்படியான வாய்ப்புகள் அமையும். அந்த நேரத்தில் சரியான முயற்சி செய்தால் நிச்சயம் வாழ்க்கையில் மறுபிறவி எடுத்துவிடலாம். அப்படியான பிரபஞ்ச ரகசியத்தை விளக்கும் வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவில் சாதலின் பிடியில் இருந்து விலங்குகள் தப்பிப்பதை நீங்களே மனதார உணர முடியும். தப்பிக்க வழியே இல்லை என்கிறபோது எதிர்த்து நின்றால் கூட ஆபத்தில் இருந்து தப்பித்துவிடலாம் என்பதையும் இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | உயிருக்கு போராடிய ஆமையை மனிதர்களிடம் ஒப்படைத்த சுறா - வைரல் வீடியோ


சிங்கம் ஒன்று பயங்கர பசியில் வேட்டையாட துடிக்கிறது. காட்டெருமை கூட்டத்துக்குள் புகுந்து தனக்கான இரை கிடைத்துவிடாதா என அலசும்போது ஒரே ஒரு காட்டெருமை மட்டும் தப்பிக்க வழியில்லாமல் கீழே விழுந்து மாட்டிக் கொள்கிறது. உடனே அந்த காட்டெருமையை சிங்கம் வேட்டையாட முயற்சிக்கும்போது, தப்பிக்க வழியே இல்லாத காட்டெருமை சிங்கத்தையே எதிர்த்து நிற்கிறது. இதனை சிங்கம் துளியும் எதிர்பார்க்கவில்லை. வேட்டை விலங்கு எதிர்த்து நின்றதால் பயந்துபோன சிங்கம், அந்த காட்டெருமையை வேட்டையாடாமல் விட்டுவிடுகிறது.


இன்னொரு சந்தர்ப்பத்தில் தண்ணீருக்குள் செல்லும் மானை வேட்டையாட முதலை வந்துவிடுகிறது. இதனை மான் எதிர்பார்க்கவில்லை. உடனே தப்பித்தே ஆக வேண்டும் என்ற நிலையில் நீருக்குள் வேகமாக ஓடுகிறது மான். ஆனால் முதலை அதனை விட்டுவிடக்கூடாது என்பதற்காக வேகவேகமாக தண்ணீரில் நீந்திவந்து பிடித்துவிடுகிறது. மான் சிக்கி விட்டது என எல்லோரும் நினைக்கும் நேரத்தில் தண்ணீருக்குள் மூழ்கி எட்டி குதிக்கிறது மான். இந்த உந்துதலில் மான் மீது இருந்த முதலையின் பிடி அகன்று நீருக்குள் விழுகிறது முதலை. அடுத்த நொடியில் சுதாரித்துக் கொள்ளும் மான் பத்திரமாக கரையை நீந்தி சேர்ந்துவிடுகிறது. இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.



சாவின் விளிம்புக்கு சென்று விலங்குகள் தப்பிக்கும் இந்த வீடியோ, கஷ்டத்தில் துவண்டுபோய் விழுந்துவிட்டோம் என நினைப்பவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வீடியோவாகவும் இருப்பதால் பலரும் லைக் செய்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் விரும்பி பார்த்துள்ளனர்.


மேலும் படிக்க | ஆட்டோவில் கூலர்: இந்த ஆட்டோக்கார அண்ணனுக்கு ஒரு ஓ போடுங்க... வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ