Twitter Trends: ட்விட்டரில் அலப்பறை செய்யும் ஒன்றிய உயிரினங்கள். இந்தமுறை சிக்கி இருப்பது ஜக்கி வாசுதேவ். ஈஷா மையத்தை அமைக்கும் போது வனப்பகுதிகளை ஆக்கிரமைப்பு செய்துள்ளதாக தொடர்ந்து அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர் தரப்பில் இருந்து, எந்த நிலத்தையும் ஆக்கிரமைப்பு செய்யவில்லை. காடுகளின் நிலத்தை ஒரு இன்ச்சாவது நான் எடுத்து இருக்கிறேன் என்று நிரூபித்தால், நாட்டை விட்டே சென்று விடுகிறேன் என ஜக்கி வாசுதேவ் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் நீதிமன்றத்திலும் இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தநிலையில், வனநிலங்களை ஆக்கிரமிக்க தமிழக அரசு அனுமதிக்கவே கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் (Chennai High Court) உத்தரவிட்டுள்ளது. 


சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை தங்களுக்கு சரியாக பயன்படுத்திக்கொண்ட ஒன்றிய உயிரினங்கள், தாங்கள் வாழ்ந்த காடுகளை ஜக்கி வாசுதேவ் (Jaggi Vasudev) ஆக்கிரமித்துவிட்டார் என்று சொல்லி, எங்கள் காடு எங்கே ஜக்கி எனக்கேட்டு #காடு_எங்கடா_ஜக்கி என்ற ஹேஸ்டாக் தொடங்கி ட்வீட் செய்து வருகின்றனர். ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் ஒன்றிய உயிரினங்களின் பதிவு மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.


ALSO READ |  FreeTNTemples: அரசுக் கட்டுப்பாட்டிலிருந்து ஆலயங்களை விடுவிக்க மூன்று கோடி பேர் விருப்பம்!


சில நாட்களுக்கு முன் ஒன்றிய உயிரினங்கள் என்ற பெயரில் டைனோசர், பாம்பு, எறும்பு, சிங்கம், மண்புழு போன்ற விலங்குகள் பெயரில் ட்விட்டரில் பலவேறு கணக்குகள் தொடங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


 



 



 



 



 



 



 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR