இன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஆண்டுவிழா.  சாமானியர்கள் வென்ற புரட்சி. தமிழனின் தளரா மனமும் அயரா தன்மையும் கண்ட  வெற்றி. வாழ்க நற்றமிழர்!தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு இந்தாண்டு எந்த வித தடையுமின்றி நல்ல முறையில் நடந்தது. இதற்கு முழுகாரணம், தமிழகத்தில் கடந்தாண்டு நடந்த எழுச்சி போராட்டம் தான். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுரையில் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டம், தமிழகம் முழுவதும் பரவி, சென்னை மெரினாவில் மிகப்பெரிய எழுச்சி போராட்டமாக மாறியது. இந்த போராட்டம் முடிந்து இன்றோடு ஓராண்டாகி உள்ள நிலையில் நடிகர் கமல், இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


இது குறித்து நடிகர் கமல் கூறியுள்ளது; "இன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஆண்டுவிழா. சாமானியர்கள் வென்ற புரட்சி. தமிழனின் தளரா மனமும் அயரா தன்மையும் கண்ட வெற்றி. வாழ்க நற்றமிழர்" என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.