Video: சர்கார் சர்ச்சை குறித்து இயக்குநர் AR முருகதாஸ் விளக்கம்!
சர்கார் - செங்கோல் கதை சர்ச்சை குறித்து சர்கார் இயக்குநர் AR முருகதாஸ் விளக்கம் அளித்துள்ளார்!
சர்கார் - செங்கோல் கதை சர்ச்சை குறித்து சர்கார் இயக்குநர் AR முருகதாஸ் விளக்கம் அளித்துள்ளார்!
துப்பாக்கி, கத்தி திரைப்படத்திற்கு அடுத்து மூன்றாவது முறையாக நடிகர் விஜய் மற்றும் AR முருகதாஸ் இப்படத்தில் இணைந்துள்ளனர். நடிகர் விஜய்-ன் 62-வது திரைப்படமான இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், இந்த திரைப்படத்தின் கதை தனது கதை எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வருண் ராஜேந்திரன் என்பவர் மனுத்தாக்கள் செய்தார்.
இந்த மனுவை கடந்த 26-ம் தேதி விசாரணை செய்த நீதிபதி படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் மற்றும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் வரும் 30-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும், அதுவரை படத்தை வெளியிட தடைவிதிக்க முடியாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து, இன்று காலை மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் சன் பிக்சர்ஸ் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், செங்கோல் கதையின் கதாசிரியர் வருண் ராஜேந்திரனுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமரசம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.
சர்கார் பட டைட்டிலில் வருண் ராஜேந்திரனுக்கு நன்றி தெரிவிக்க பட நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் இந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சர்கார் இயக்குயர் AR முருகதாஸ் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார்!