சென்னை: அண்மையில் சென்னையில் தனது முதல் தயாரிப்பான '99 சாங்ஸ்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆஸ்கார் இசை நாயகன் ஏ.ஆர்.ரகுமான், அங்கு நடந்த ஒரு விசித்திரமான விஷயத்திற்காக டிரெண்ட் ஆனார். ஏற்கனவே ‘99 சாங்ஸ்’ மக்களிடையே பெரும் பரபரப்பை எற்படுத்தி டிரெண்ட் ஆகி வருகிறது. இப்போது ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்வும் டிரெண்டிங்கில் உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிகழ்ச்சி தொகுப்பாளர் இந்தியில் பேசியதை வேடிக்கையாக கிண்டல் செய்த ஏ.ஆர். ரகுமான் (AR Rahman) அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தினார். தன்னுடைய சாந்த சுபாவத்திற்கும் அதிகம் பேசாத தன்மைக்கும் பெயர் போன ரகுமானின் இந்தப் பக்கம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 


வெள்ளிக்கிழமை, '99 சாங்ஸ்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரகுமான் கலந்து கொண்டார். இவருடன் மேடையில் படத்தின் கதாநாயகனான இஹான் பட்டும் இருந்தார். இஹான் பட் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ஏ.ஆர். ரகுமானை தமிழில் வரவேற்ற தொகுப்பாளினி, இஹான் பட்டை வரவேற்கும் போது இந்திக்கு மாறினார். எனினும், அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே நடுவில் பேசிய ரகுமான் “இந்தி?” என கேட்டுவிட்டு மேடையில் இருந்து வெளியேறினார்.


ALSO READ: அசத்தும் அசுரன்: வாங்கிய விருதுக்கு உருகி உருகி நன்றி கூறிய தனுஷ்


இதன்பிறகு, ரஹ்மான் தொகுப்பாளரிடம், “நீங்கள் தமிழில் பேசுவீர்களா இல்லையா என்று நான் ஏற்கனவே உங்களிடம் கேட்கவில்லையா?" என்று கேட்டார். இஹானுக்கு ஒரு நல்ல வரவேற்பை அளிக்கவே தான் இந்தியில் பேசியதாக தொகுப்பாளினி கூறினார். பதட்டத்தில் இருந்த தொகுப்பாளினிக்கு ஆச்சரியம் காத்திருந்தது. 


அவர் பதட்டம் அதிகமாவதை அறிந்த ரகுமான், சிரித்து விட்டு, தான் வேடிக்கை செய்ததாக கூறினார். அங்கிருந்த பார்வையாள்ர்களும் இதைக் கேட்டு சிரிக்கத் தொடங்கினர். 


ஏ.ஆர்.ரகுமான் தொகுப்பாளினியை வேடிக்கையாக கிண்டல் செய்து அனைவரையும் சிரிக்க வைத்த வீடியோ ஆன்லைனில் டிரெண்ட் ஆகிறது. 
இஹான் பட் மற்றும் எடில்ஸி வர்காஸ் நடித்த ’99 சாங்ஸ்’ படத்தை அறிமுக இயக்குனர் விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். இப்படத்தை தயாரித்துள்ள ஏ.ஆர்.ரகுமான், விஷ்வேசுடன் சேர்ந்து படத்திற்கான திரைக்கதையையும் எழுதியுள்ளார். 


இசையின் அடிப்படையில் உருவாகியுள்ள இந்த காதல் கதை ஏப்ரல் 16 ஆம் தேதி திரையரங்குகளில் (Cinema Theatres) வெளியிடப்படும். ‘99 சாங்ஸ்’-சின் போஸ்டரை பகிர்ந்த ஏ.ஆர்.ரகுமான், “# 99 சாங்ஸ் ஏப்ரல் 16, 2021 அன்று இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிடப்படும் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. ஷ்வேஷ் கே இயக்கியுள்ள இப்படத்தில் இஷான் பட் மற்றும் எடில்ஸி வர்காஸ் ஆகிய திறமையான நடிகர்கள் நடித்துள்ளார்கள்” என்று எழுதினார். 


இந்த படம் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடப்படும்.


ALSO READ: Thalaivi Trailer: அசத்தல் வசனங்களுடன் "தலைவி" பட டிரெய்லர் வெளியானது!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe