கௌகாத்தி சிறுமி ஒருவரின் முகப்புத்தக பதிவு அவரை உயிரையே காப்பாற்றியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அசாம் மாநிலம் கௌகாத்தியை சேர்ந்த சிறுமி ஒருவர், தனது முகப்புத்தகத்தில் "நான் இன்று தற்கொலை செய்துக்கொள்ள போகின்றேன்" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவினை பார்த்த முகப்புத்தக பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள், அச்சிறுமியின் இடத்தினை கண்டறிந்து அம்மாநில காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளது.


இந்த தகவலின் அடிப்படையில் அஸாம் காவல்துறையினர், சிறியினை கண்டறிந்து அவரது தற்கொலை முயற்சியினை முறியடித்துள்ளனர். இந்த நகழ்வினை குறித்து அஸாம் காவல்துறையினர் தங்களது முகப்பதக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.



காவல்துறையினர் தங்களது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது... தற்கொலைக்கு முயன்ற சிறுமி காப்பாற்றப்பட்டுள்ளார். அவர் பாதுகாப்பான நிலையில் அவர்களது பெற்றோர்களுடன் உள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த தற்கொலை குறித்து பேஸ்புக் நிறுவனம் தகவல் அளித்ததாகவும், தகவல் அளித்த பேஸ்புக் நிறுவனத்திற்கு நன்றி எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


எனினும் பாதிக்கப்பட்ட குழந்தை மற்றும் அவர்களது குடும்பத்தாரின் பெயர், தகவல்கள் காவல்துறையினர் வெளியிடவில்லை.