நான் அயோத்தி….


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரகுகுல திலகன் ஸ்ரீராமனின் தலைநகரான அயோத்தி.  ஸ்ரீ ராமர் அயோத்தி நகரின் மண்ணில்தான் பிறந்தார். எனது முற்றங்களில் ஸ்ரீராமர் (Lord Shri Ram), அவரது சகோதரர்களான இலக்குவன், பரதன் மற்றும் சத்ருக்னனுடன் துள்ளிக் குதித்து விளையாடியுள்ளார்.


ராமர் சீதையை மண முடித்த பிறகு மிதிலை மன்னர் ஜனகரின் வீட்டிலிருந்து அன்னை சீதை இங்குதான் வந்தார். எனக்கு முன்புதான் ஸ்ரீ ராமரின் முடிசூட்டு விழா நடைபெற்றது.


ராமராஜ்யம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது என்பதை நான் பார்த்துள்ளே.


நான் அயோத்தி, ராமராஜ்ஜியத்தின் சாட்சி…


நான் அயோத்தி (Ayodhya), பல நூற்றாண்டுகளின் மரபுகளின் சாட்சி….


நான் அயோத்தி, நான் சரித்திரத்தின் சான்று, வரலாற்றின் வேர்…


நான் அயோத்தி, நம்பிக்கை மற்றும் பெருமையின் சின்னமாக இன்னும் நிற்கிறேன்….


பல நூற்றாண்டுகளாக, நான் சகோதரத்துவத்தைக் கண்டுள்ளேன், அமைதியைக் கண்டுள்ளேன், ஒற்றுமையைக் கண்டுள்ளேன். இவை அனைத்தும் ராமரால் போடப்பட்ட அடித்தளம். இன்றும் இங்கு மக்கள் இதே நல் மதிப்புகளுடன்தான் வாழ்கிறார்கள்.


எனது பெயரின் பொருளைக் கூறுகிறேன். என் பெயரின் பொருளே, இங்கு போர் வேண்டாம் என்பது தான். அயோத்தி நகரில் அனைவரும் நிம்மதியாக வாழ இதுவே காரணம். நான் பெருமையின் சின்னம். நான் அமைதியின் சின்னம். நான் மரியாதைக்குரிய ராமரின் சின்னம்.


அயோத்தியாகிய நான், சரயு நதியின் கரையில் வளர்ந்து செழித்தோங்கியவள். ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றை நான் என் கண்களால் பார்த்திருக்கிறேன். பல வம்சங்களின் எழுச்சி மற்றும் வீழ்ச்சிக்கு நான் சாட்சியாக இருந்தேன். பல கலாச்சாரங்கள் என் கண் முன்னே வளர்ந்தன. பல மரபுகள் ஆரம்பித்தன, முடிந்தன. ஆனால் மாறாதது என் இருப்பு மட்டும்தான்.


ALSO READ: பூலோக சொர்க்கம், ராமர் அவதரித்த பூமி…அயோத்தியை சுற்றி வரலாம் வாங்க!!


நான் அப்போதும் இருந்தேன், இன்றும் இருக்கிறேன், எதிர்காலத்திலும் இருப்பேன். நான் வரலாறு, நிகழ்காலம், எதிர்காலமும் நான்தான்.


கோசலா மாநிலத்தின் தலைநகராகிய நான் வரலாற்றில் பெருமையோடு நிற்கிறேன். ஸ்ரீ ராமர் என்னில், என் மண்ணில் பிறந்தார், எனது முற்றத்தில் வளர்ந்தார். இன்று நான் அவருடைய பெயரால் அறியப்படுகிறேன். இதை என் பாக்கியமாகக் கருதுகிறேன்.


அப்போது, 14 ஆண்டுகள் வனவாசத்திற்குப் பிறகு, ராமர் என்னிடம் திரும்பியபோது, நான் அலங்கரிக்கப்பட்டேன். இன்றும் அவ்வாறே, அலங்கரிக்கப்பட்டுள்ளேன்.


பல நூற்றாண்டுகளாக இங்கு சரயு நதி பாய்கிறது. கங்கை-யமுனையின் கலாச்சாரங்களின் சங்கமம் சரயு நதி. கலாச்சாரங்கள் என் மடியில் பிறந்தன. இன்றும் கூட இந்து, பௌத்த மதம், இஸ்லாமிய மதம், மற்றும் சமண மதங்களைச் சேர்ந்த மக்கள் இங்கு ஒன்றாக வாழ்கிறார்கள். என்னில் ஓடும் சரயுவின் கரையில், 14 பெரிய காட்கள் உள்ளன. ஒவ்வொரு காட்டிற்கும் ஒரு சொந்த கதை உண்டு. அவற்றில், குப்த்வார் காட், கைகேயி காட், கௌசல்யா காட், பாப விமோச்சன் காட், லக்ஷ்மன் காட் ஆகியவை மிக முக்கியமானவை.


ராமரின் மிகப்பெரிய பக்தரான அனுமனின் புகழ்பெற்ற கோயில் ஹனுமன்கரி, எனது மண்ணில் கட்டப்பட்டுள்ளது. ராம்லல்லா, ஹனுமந்த்லால், நாகேஸ்வர்நாத் போன்ற ஆலயங்கள் எனது மண்ணில் உள்ளன.


அயோத்தியான நான் எவ்வாறு துளசிதாசரை மறக்க முடியும்? என் மண்ணில் துளசி சௌரா என்ற இடம் உள்ளது. இங்கு அமர்ந்துதான் துளசிதாசர் ராமசரிதமானசை எழுதினார்.


ராமர் என் மடியில் விளையாடினார். என் மண்னில்தான் அவர் வளர்ந்தார். இது ராம ராஜ்ஜியம் நடந்த இடம். என்னை மக்கள் சொர்க்கத்துடன் ஒப்பிடுகிறார்கள்.


“இலங்கை தங்கத்தால் செய்யப்பட்டிருக்கலாம். ஜொலித்து கண்ணை பறிக்கலாம். ஆனால், நான் பிறந்த அயோத்தி நகரம், என தாய் மண், அதுதான் எனக்கு மிகவும் பிடித்த இடம்” என்று ராமரே கூறியுள்ளார்.


நான் வெகு நாட்களாக காத்துக்கொண்டிருந்த நாள் இப்போது வந்து விட்டது. என் ராமரின் கோயிலின் கட்டுமானப் பணிகள் துவங்கிவிட்டன. ராமர் பிறந்து வளர்ந்ததற்கு சாட்சியாக இருந்த நான், இந்த நாளுக்கும் சாட்சியாக உள்ளேன். வரவிருக்கும் அனைத்து நல்ல காலங்களுக்கும் சாட்சியாக இருப்பேன்.


ராமர் இங்கு பிறந்தார், ராம ராஜ்ஜியம் இங்கு நடந்தது என்பதற்கு சாட்சியாக, அன்றும், இன்றும், என்றும் பெருமையுடன் நிற்கும் நான் அயோத்தி!!


ALSO READ: ஒரு சொல், ஒரு வில், ஒரு இல்… உதாரண புருஷனாய் வாழ்ந்து காட்டிய ஸ்ரீ ராமன்!!