இணையத்தை கலக்கும் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் புதிய அவதார வீடியோ....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போதைய காலகட்டத்தில் இணையதளம் ஒரு மாபெரும் ஊடக சக்தியாக விளங்குகிறது. கருத்துக்கள் மக்களை எளிதில் சென்றடையும் பெரும் கருவியாகவே இணையதளம் இருந்து வருகிறது. முன்பு போல் மக்களுக்கு ஒரு கருத்தை நாம் காதில் உரைக்க சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. பிரச்சனைகள் பற்றிய ஒரு கருத்தை இணையத்தில் பதிவிட்டால் போதும், கருத்துக்கள் வந்து குவியும். 


இதற்க்கு மட்டும் இல்லை நடனம், இசை, பாட்டு போன்ற பல கலைத்திரன்களை வெளிகொண்டுவரவும் சமூக வலைத்தளம் ஒரு உந்துகோலாக விளங்குகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக ஆதரவாளர்கள் சிலர் வீடியோ ஒன்றை உருவாக்கி ட்ரெண்டாக்கியுள்ளனர். அந்த வீடியோவில் மத்திய பிரதேசம் மகிழ்மதியாகவும், அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் பாகுபலியாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தேர்தல் பரப்புரைக் குழு தலைவர் ஜோதித்ராய சிந்தியா, பல்வால் தேவனாகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளது.


பல்வால் தேவனை வீழ்த்தி, பாகுபலியான சிவ்ராஜ்சிங் மத்திய பிரதேச மாநிலத்தை காப்பதைப் போல வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ பாஜக சார்பில் தயாரிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ள அம்மாநில அமைச்சர் விஷ்வாஸ் சாரங், பாஜக அரசின் சாதனைகளை கண்ட பிறகு சிவ்ராஜ்சிங் சவுகானை மக்கள் பாகுபலியாகவே கருதுவதாக கூறியுள்ளார். 


இந்நிலையில் இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் அது குறித்து கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோவை பார்த்து நெட்டிசங்கள் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர் மத்திய பிரதேசம் தேர்தலுக்கு முன்னதாகவே படைப்பாற்றலை காட்டிவருகிறது என்று கலாய்த்துள்ளனர். 


இதோ அந்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது....!