ரஷ்யா - உக்ரைன் மோதலுக்கு முடிவு கட்ட வேண்டும் என அமைதிக்காக குரல் கொடுக்கும் குட்டிப் பெண்ணின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரஷ்யாவும் உக்ரைனும் கடுமையாக சண்டையிட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், உலகெங்கிலும் உள்ள பலர் அமைதியை நாடுகின்றனர்.ரத்தக்களரியை முடிவுக்கு கொண்டு வரவும், முற்றுப்புள்ளி வைக்கவும் விரும்புபவர்களின் கோரிக்கைகளுக்கு ரஷ்யா செவிசாய்க்கவில்லை.


சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவில் ஒரு சிறுமியின் வெகுளித்தனமான முறையீடு இதயங்களை வென்றுவிடும். இந்த வீடியோ (Viral Video) இன்ஸ்டாவில் வைரலாகிறது.


 



ஆனால், இந்த குட்டிப் பெண்ணின் கோரிக்கை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் இதயத்தைத் தொடுமா?  இந்தக் கேள்விக்கான பதில் முடிவிலியாக தொடர்கிறது. 


“பூமியில் அமைதி வேண்டும். பூமி துண்டாகக்கூடாது. நாம் அனைவரும் சகோதர சகோதரிகள். போரை நிறுத்துங்கள்" என்று மழலையில் கோரிக்கை விடுக்கிறார்.


பிரிட்டானி & லில்லி என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து இந்த வீடியோ அண்மையில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இன்ஸ்டா கணக்கை ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பின்தொடர்கின்றனர். 


மேலும் படிக்க | இரு ராஜநாகங்களுக்கு இடையில் நடக்கும் கடுமையான போர்!


 "உக்ரைன் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து அப்பாவி உயிர்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்" என்று இந்த வீடியோவுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.  


இந்த வீடியோ, இதுவரை 1.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. "ரஷ்யர்கள் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறார்கள்," என்று ஒரு பயனர் ஒரு கருத்தில் கூறினார்.


"நான் உக்ரைனைச் சேர்ந்தவன், மற்ற நாடுகளின் இத்தகைய ஆதரவைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நன்றி” என்று ஒரு நெட்டிசன் கூறியுள்ளார். "உனக்கு ஆசீர்வாதம் லில்லி" என்று ஒருவர் கூறினார்.


"மிகவும் உண்மை... நாம் அனைவரும் கேட்க வேண்டிய மிக அழகான பாடம்" என்று மற்றொரு பயனர் கூறினார்.


மேலும் படிக்க | Viral Video: 10வது மாடியிலிருந்து தொங்கும் குழந்தை; மனதை பதற வைக்கும் வீடியோ!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR