மூழ்கிய காக்கா, அசால்டாய் காப்பாற்றி ஹீரோவான கரடி: பாராட்டும் நெட்டிசன்கள்
Viral Video: குளத்தில் விழுந்த காக்கையை காப்பாற்றும் ஒரு கரடியின் மனிதாபிமான செயல் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வைரல் வீடியோ: சமூக ஊடகமே ஒரு ஆச்சரியமான உலகம் தான். ஏனென்றால் அங்கு சிந்திக்கவும், சிரிக்கவும், ஆச்சரியப்பட வைக்கும் பல விஷயங்கள் உள்ளன. அதேபோல சமூக ஊடகளில் பல வீடியோக்கள் பகிரப்படுகிறது. அதில் விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. புடாபெஸ்ட் உயிரியல் பூங்காவில் வாழும் "வாலி" என்ற கரடி செய்த செயல் அனைவரின் நெஞ்சை உருக்கி உள்ளது. தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவை நீங்கள் பார்த்தால், உங்கள் இதயமும் மகிழ்ச்சி கொள்ளும்.
வைரல் வீடியோவில் ஒரு காகம் தற்செயலாக அருகிலுள்ள குளத்தில் தண்ணீர் குடிக்க இறங்கிய போது, எதிர்பாராதவிதமாக குளத்தில் காக்கை விழுந்து விடுகிறது. அப்பொழுது அங்கு ஜாலியா சுற்றித்திரியும் கரடி ஒன்று வருகிறது. குளத்தில் விழுந்த காக்கையை பார்க்கிறது. அந்த காட்சியை பார்ப்பவர்களுக்கு ஒருவித பயம் ஏற்படுகிறது. ஏனென்றால் வாலி (கரடி) அந்த காகத்தை விழுங்கி விடுமோ என்ற எண்ணம் ஒரு கணம் தோன்றுகிறது. அடுத்து என்ன நடக்குமோ? என்ற ஒருவித அச்சத்தில் காட்சிகள் நகர்கிறது. மாறாக, இரக்கமுள்ள கரடி காகத்தின் உயிரைக் காப்பாற்றுகிறது.
வீடியோவை பாருங்கள்:
மேலும் படிக்க: Viral Video: கரும்பை ரசித்து ருசித்து சாப்பிடும் க்யூட்டான பாண்டா கரடி!
சக விலங்கிற்கு உதவுவது வாலியின் செயலைப் பார்த்து, அதன் மீதான அன்பு பலமடங்கு உயருகிறது. பொதுவாக இதயத்தைக் கொள்ளை கொள்ளும் பல வீடியோக்கள் இருகின்றன. அதன் வரிசையில் கரடி- காகம் நட்பு வீடியோவும் இணைந்துள்ளது. காகத்தை காப்பற்றும் அந்த தருணம் அனைவரின் மனதளவில் ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ காட்சிகள் புடாபெஸ்ட் மிருகக்காட்சிசாலையில் எடுக்கப்பட்டது மற்றும் சமூக ஊடகமான ட்விட்டரில் பாசினாட்டிங் (Fascinating) என்ற பக்கத்தில் இந்த "காக்கை மீட்பு" வீடியோ பகிரப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க: அம்மாவ அம்போனு விட்டுட்டு மொபைலுடன் ஓடியே போன சிறுமி: சிரிப்புக்கு நாங்க கேரண்டி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ