ஒரு பிரபல கம்பம் நடனக் கலைஞரைப்(Pole Dancer) போலவே தலைகீழாக நடனமாடும் ஒரு தெளிவற்ற கரடி தான் தற்போது இணையவாசிகளின் பேச்சுப்பொருள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காட்டிற்கு சென்ற நபரது கேமிராவில் பிடிப்பட்ட இந்த கரடி-யின் வீடியோ தற்போது ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது. சுமார் 13-வினாடிகள் உள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


READ | வண்ணமயமான இலை பூச்சிகளின் Viral Video... வியக்க வைக்கும் உண்மைகள்...


உண்மையில் இந்த கரடி, அருகில் இருக்கும் கம்பம் ஒன்றில் தனது முதுகின் அரிப்பை போக்க உராய்கிறது. எனினும் கரடியின் இந்த செயல்பாடு பார்பவர்களை கவரும் விதமான ஒரு கம்ப நடனம் போல் அமைந்துள்ளது. பின்னணியில் சரியான காட்சிகளுடன், கரடி வானத்தில் மேலே பார்த்தப்படி கம்பத்தில் தனது முதுகை தேய்ப்பது ஒரு தேர்ச்சிப்பெற்ற நடன கலைஞரின் நடன அசைவு போலவே காட்சியளிக்கிறது.



கரடிகள் பெரும்பாலும் தங்கள் அழகான செயல்களுக்காக அறியப்படுகின்றன. இந்நிலையில் தற்போது இந்த கம்பம் நடனத்துடன் ஒரு கரடி உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


READ | McDonald உணவும், அம்மாவின் அன்பும்.. மகிழ்ச்சியில் சிறுவன் ஆனந்த கண்ணீர்: Viral Video...


இந்திய வன சேவை (IFS) அதிகாரி ஒருவர் பகிர்ந்த இந்த வீடியோ பலரது கவனத்தை தற்போது தன் பக்கம் ஈர்த்துள்ளது.



IFS அதிகாரி சுதா ராமன் தனது பதிவுக்கு தலைப்பிடுகையில்., "ஒரு கரடி எப்படி நடமாடும் என்று எப்போதாவது கற்பனை செய்திருக்கிறீர்களா?? இந்த வீடியோ கரடிகளின் நடனம் பற்றியது அல்ல. எனினும் வழக்கமாக, ஆண் கரடிகள் தங்கள் வாசனையை போக்க மரங்கள் மற்றும் கம்பங்களுக்கு மேல் முதுகில் தடவுகின்றன. இது, தங்கள் நிலப்பரப்பைக் குறிக்கும் ஒரு நடத்தை. இனப்பெருக்க காலத்தில் பெரும்பாலும். தாய்மார்கள் குட்டிகளுக்கு பயிற்சி அளிக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.