தமிழ்நாட்டின் ஊட்டிக்கு சுற்றுலா வரவேண்டும் என்பது பலரின் பயண பக்கெட் லிஸ்டில் இருக்கும். ஏனென்றால் இங்கிருக்கும் கால நிலை மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் அழகு, கூடவே வனவிலங்குகளையும் காணும் வாய்ப்புள்ளதால் உதகைக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என நினைக்கின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகையை ஈர்ப்பதற்காக தமிழக அரசு சார்பிலும் மலர்க்கண்காட்சி உள்ளிட்டவை ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அங்கு சுற்றுலா சென்றால் நிச்சயமாக இயற்கையின் மிக பாரிய படைப்புகளில் இருக்கும் எத்தனையோ அழகான இடங்களில் ஓர் இடத்துக்கு  சென்று வந்த திருப்தி இருக்கும். அப்படியான இயற்கையின் சுவாரஸ்யங்களைக் கொண்டிருக்கும் உதகையில் இந்த வாரம் கரடி ஒன்று சாலையில் ஜாலியாக உலா வந்த வீடியோ வெளியாகியிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சின்னஞ்சிறு பறவையை சித்திரவதை செய்யும் மனித மிருகம்... மனதை பதற வைக்கும் வீடியோ!


விடுமுறை நாளை ஊட்டியில் கொண்டாட வந்த சுற்றுலா பயணிகளின் கண்களில் இந்த கரடி தென்பட்டது என்னவோ அவர்களுக்கு வரப்பிரசாதம் தான். அதனை பார்த்து மகிழ்ந்த அதேநேரத்தில் சுற்றுலா  பயணிகளுக்கு பயத்தையும் காட்டி சென்றிருக்கிறது கரடி. இதனை அவர்கள் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவும் இணையவாசிகளை சென்றடைந்துள்ளது. இந்த வீடியோ உதகையிலிருந்து எடக்காடு செல்லும் சாலையில் தான் எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வழியில் செல்லும்போது தான் கரடியும் ஜாலியாக சாலையில் உலா வந்திருக்கிறது. 



அப்போது வாகனத்தை கண்டவுடன் சாலை ஓரம் சென்று காலை ஆட்டிக்கொண்டே வாகனத்தை முறைத்தது. இதனால் அவர்கள் சற்று பீதி அடைந்துள்ளனர்.  உதகை பகுதியில் விலங்குகள் அடிக்கடி மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தென்படுவது வாடிக்கையாகியுள்ளது. குறிப்பாக மஞ்சூர் கெத்தை எடக்காடு பகுதிகளில் தேயிலை தோட்டங்களில் உலாவரும் கரடிகள் அவ்வப்போது சாலையிலும் உலா வருகின்றன. இரவு மற்றும் பகல் என இரு பொழுதுகளிலும் சுற்றித் திரிகின்றன. இதனால் மஞ்சூர் எடக்காடு சாலையில் செல்லும் வாகனங்கள், வேகமாக செல்லாமல் மிகவும் கவனமாக இயக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 


மேலும் படிக்க | அப்பாடா மழை வந்துடுச்சு: மழையில் நாயின் குத்தாட்டம்... மீண்டும் மீண்டும் பார்க்கும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ