Viral Video: இப்போதெல்லாம் வீடியோக்கள் இணையத்தில் வைரலாவது வாடிக்கையாகி விட்டது. அதிலும் ஏராளாமான திருமண வீடியோக்கள் இணையத்தில் குவிந்துள்ளன. மக்களும் இதுபோன்ற வீடியோக்களை பார்ப்பதை விரும்புகிறார்கள். அதற்கு காரணம் மணமகனும், மணமகளும் தங்கள் திருமணத்தை மறக்கமுடியாத ஒரு நிகழ்வாக மாற்ற அவர்கள் எடுக்கும் முயற்சிகள் தான். தற்போது ஒரு திருமண வீடியோ வைரலாகி வருகிறது அதுக்குறித்து பார்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருமணத்தை சிறப்பாக நடத்த மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார் அனைவரும் பல்வேறு திட்டங்களை தீட்டி முயற்சிகள் செய்து செய்து வருகின்றனர். அதேநேரத்தில் திருமண நிகழ்வின் போது மணமகனும், மணமகளும் செய்யும் ஒருசில காரியங்கள் அனைவரின் கவனத்தை ஈர்க்கிறது. இந்த வீடியோவில் மணப்பெண் தனது வருங்கால கணவரிடம் சில வாக்குறுதிகளை நிறைவேற்றும்படி கேட்கிறார். அவர் கேட்டது தான் "இந்த வீடியோ" வைரலாக காரணமாக அமைத்துள்ளது. 


இந்த வீடியோ நிச்சயதார்த்தம் நடந்த அன்று எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்த வீடியோவில் நிச்சயதார்த்தத்தை முன்னிட்டு மேடை அலங்கரிக்கப்பட்டிருப்பதை காணலாம். அங்கு மணமக்கள் ஒன்றாக நிற்கிறார்கள். இதில் மணப்பெண் திருமணத்திற்கு முன்பே தனது வருங்கால கணவரிடம் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பாஸ்வேர்டு வேணும் என்று கேக்கிறார். அதற்கு அவர் (வருங்கால கணவன்) சொல்லும் பதிலைக் கேட்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அதே நேரத்தில், மணமகனும் ஒரு வாக்குறுதியைக் காப்பாற்றுமாறு மணப்பெண்ணிடம் கேட்கிறார், அதை மணமகளும் ஏற்றுக்கொள்கிறார். 


மேலும் படிக்க: தாலிகட்டும் நேரத்தில் நாடகமாடி திருமணத்தை நிறுத்திய மணமகள்


நிச்சயதார்த்த விழாவை பெண் ஒருவர் தொகுத்து வழங்குவதை வீடியோவில் காணலாம். இந்த விசித்திரமான வாக்குறுதிகளை நிறைவேற்றும்படி கணவன் மற்றும் மனைவியிடம் அந்த பெண் கூறுகிறார். முதலில் மனைவி சார்பாக பேசும் போது, ​​இன்று முதல் இனிமேல் "பேஸ்புக், இன்ஸ்டாகிராம்" ஆகியவற்றின் பாஸ்வேர்டை மனைவிக்கு கொடுக்க வேண்டும் என்று கணவரிடம் வாக்குறுதி வாங்குகிறார் அந்த பெண். பதிலுக்கு கணவன் தன் மொபைல் போனையே மனைவிக்கு கொடுப்பதாக கூறுகிறார். கணவரின் இந்த பதில் அனைவரது மனதையும் வென்றது.


கணவர் இந்தப் பதிலைச் சொன்னவுடன், அங்கிருந்தவர்கள் சத்தமாகச் சிரிப்பதை நீங்கள் காணலாம். உடனடியாக பதில் அளித்த கணவரின் செயலை மக்களும் பாராட்டுகிறார்கள். 


இந்த வீடியோ witty_wedding என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. "இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவீர்களா" என தலைப்புடன் இந்த வீடியோ மிகவும் பிரமாண்டமாக வைரலாகி வருகிறது.


 



மேலும் படிக்க: இணையத்தை இளக வைத்த அண்ணன் தங்கை பாசம்: கதறி அழுத அண்ணன், வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR