பாகிஸ்தான் முதலீட்டாளர் மாநாட்டில் பெல்லி டான்ஸ்; வைரல் Video!
அஜர்பைஜான் தலைநகரான பகுவில் செப்டம்பர் 4-8 வரை ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் கடைசி நாளான நேற்று மாநாட்டில் பெல்லி நடன நிகழ்ச்சி நடைபெற்றது தற்போது தலைப்பு செய்தியாகியுள்ளது.
அஜர்பைஜான் தலைநகரான பகுவில் செப்டம்பர் 4-8 வரை ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் கடைசி நாளான நேற்று மாநாட்டில் பெல்லி நடன நிகழ்ச்சி நடைபெற்றது தற்போது தலைப்பு செய்தியாகியுள்ளது.
கிட்டத்தட்ட திவாலான நிலையில் இருக்கும் தனது பொருளாதாரத்தை புதுப்பிக்க பாகிஸ்தான் அந்நிய முதலீட்டிற்கு ஆசைப்படுகிறது. அதன் முயற்சியாக வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவர்ந்திழுக்கும் முயற்சியில், பணமில்லா நாடு அஜர்பைஜானில் ஒரு உலகளாவிய உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்தது, ஆனால் உச்சி மாநாட்டை தவிற்த்து, நிகழ்ச்சியில் நடந்த பெல்லி நடன நிகழ்ச்சி முதன்மை செய்தியாய் மாறியுள்ளது.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா பிராந்தியத்திற்கான உலகளாவிய முதலீட்டை ஈர்ப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட முதலீட்டாளர்களின் உச்சி மாநாட்டை அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் உள்ள சர்ஹாத் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் ஏற்பாடு செய்தது.
கூட்டத்தில் சிக்கலான கைபர் பக்துன்க்வா பிராந்தியத்தில் உள்ள பல்வேறு முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் மாநாட்டிற்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு காட்சி விருந்து அளிக்கும் வகையில் பெல்லி நடன நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உச்சி மாநாட்டில் நிகழ்ந்த இந்த பெல்லி நடன நிகழ்ச்சி பல்வேறு விமர்சனங்களை பெற, இந்த நிகழ்வின் வீடியோ இணையத்தில் வைரலாக துவங்கியது. இந்த வீடியோவில், இரண்டு முதல் மூன்று பெல்லி நடனக் கலைஞர்கள் மேடையில் இசைக்கு நடனமாடுவதை காணலாம்.
சமூக ஊடகங்களில் இந்த வீடியோவைப் பகிர்ந்த பலரும் கடுமையான விமர்சனங்களையும் பகிர்ந்துள்ளனர் - 'இது புதிய பாகிஸ்தானா?' என்று சிலர் கேள்வி எழுப்ப, சிலர் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் நிலைமையை ஒப்பிட்டு, “இந்தியா தனது விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பும்போது, பாகிஸ்தான் பெல்லி நடனக் கலைஞர்களைப் பயன்படுத்துகிறது முதலீட்டாளர்களை கவர்கிறது". என குறிப்பிட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் நிதிப்பற்றாக்குறை கடந்து முப்பது ஆண்டுகளில் 2018-19 நிதியாண்டில் 8.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஊழல் எதிர்ப்பதாக கூறி ஆட்சியை கைப்பற்றிய இம்ரான் கான் பல சிக்கன நடவடிக்கைகளை செய்தார். பணப்பற்றாக்குறை நாட்டின் பொருளாதார் நிலமையை மேம்படுத்துவதாக உறுதியளித்தார்.
ஆனால் நிலமையோ தலைகீழாக நடந்துள்ளது. பாகிஸ்தானில் எரிவாயு மற்றும் எண்ணெய் பொருட்கள் மற்றும் மின்சாரத்தி விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன.