திருமண நாளன்று மணப்பெண் செய்த காரியம்! அதிர்ந்து போன நெட்டிசன்கள்!
ஒரு மணப்பெண், தனது திருமண நாளன்று செய்துள்ள ஒரு காரியம் நெட்டிசன்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
திருமணம் என்பது இருமணம் இணையும் நிகழ்வு மட்டுமல்ல, இரு குடும்பங்கள் இணையும் நிகழ்வுமாகும். தூரத்து உறவினர்கள், தொடர்பு விட்டுப்போன நண்பர்கள், நெருங்கியவர்கள், மனதுக்கு பிடித்தவர்கள் என பலரும் இணையும் இந்த திருமண நிகழ்வில் முக்கியமானவர்களாக இருப்பது, மணமகன்-மணமகள் மட்டுமே. இது, அவர்கள் இருவருக்கும் மிக முக்கிய நாளாக இருக்கும். அந்த முக்கியமான நாளில், பெங்களூருவை சேர்ந்த மணப்பெண் செய்துள்ள விஷயம், இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமணத்திற்கு மெட்ரோவில் சென்ற மணமகள்:
பெங்களூருவை சேர்ந்த மனமகள், தனது திருமணத்திற்கு மெட்ரோவில் சென்றுள்ளார். இது குறித்து வைரலாகி வரும் வீடியோவில், தனது குடும்பத்தாருடன் மெட்ரோவில் டிக்கெட் வாங்கி கொண்டு ரயிலில் அந்த பெண் பயணிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. உடல் முழுவதும் அணிகலன்கள், விலை உயர்ந்த லெஹங்கா, முகம் முழுவதும் பிரைடல் மேக்-அப் என அவர் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் வீடியோ நெட்டிசன்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது.
மெட்ரோவில் பயணித்ததற்கான காரணம் என்ன?
இந்திய அளவில், அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களில் பெங்களூருவும் ஒன்று. இந்த போக்குவரத்து நெரிசல் பிரச்சனையினால், அரை மணி நேரத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு பலர் 3 மணி நேரம் ஆகியும் செல்ல முடியாமல் இருக்கின்றனர். இதனால், தனது திருமணம் நடைபெற இருக்கும் இடத்திற்கு, நேரத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக அந்த மணப்பெண் மெட்ரோவில் பயணித்திருக்கிறார். இது, பெங்களூருவின் உண்மையான நிலையை காட்டுவதாக பலர் கருத்துகளை தெரிவித்து இருக்கின்றனர். இந்த வீடியோ, தற்போது வரை ட்விட்டர் எக்ஸ் தளத்தில் 30 ஆயிரம் வியூஸ்கள் வரை கடந்துள்ளது. பல நூறு லைக்ஸ்களையும் கடந்துள்ளது.
நெட்டிசன்களின் ரியாக்ஷன்..
ஒரு சிலர், “மெட்ரோ இருப்பதனால் அதில் சென்று விட்டார் அது இல்லை என்றால் என்ன செய்திருப்பார், எப்படி அங்கு சென்றிருப்பார்?” என்று கேள்வி எழுப்பி உள்ளனர். ஒரு சிலர், “மணப்பெண்ணும் மணமகனும் ஒரு நாள் முன்னாடியே திருமணம் நடக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும்..ஏன் கடைசி நேரத்தில் இந்த பெண் செல்கிறார்..?” என்று கேள்வி எழுப்புகின்றனர். இன்னும் சிலர், இந்த மணப்பெண் நிதர்சனமாக யோசிப்பவர் என்றும், நல்ல எதிர்காலத்திற்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
பெங்களூருவில் இவ்வளவு போக்குவரத்து நெரிசல் வர காரணம் என்ன?
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதற்கு மக்கள் தொகை அதிகமாக இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், இந்த நகரில்தான் அதிக அளவிலான கார்கள் இருப்பதாகவும் பலர் சொந்த வீடு வைத்திருப்பதை விட, சொந்தமாக கார்கள் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த நகரில் உள்ள சாலைகள் குறைவான தூரத்துடனும் குறுகலாக இருப்பதும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.
மேலும், பெங்களூருவில் பொது போக்குவரத்தும் குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது. இருக்கும் பொது போக்குவரத்துகளையும் மிகவும் குறைவானவர்களே உபயோகிப்பதாக கூறப்படுகிறது. மெட்ரோவும் இந்த நகரில் புதிதாகத்தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதுவும், ஒரு சில இடங்களில் மட்டுமே போடப்பட்டுள்ளது. இன்னும் பலர் இதற்கு பழகாததால் சரியாக இதன் பயன்பாடும் இல்லாமல் உள்ளது. இதனாலும், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ