Viral Video: சீனாவின் குவாங்டாங்கைச் சேர்ந்த ஒருவர், குளிர்சாதனப் பெட்டிக்குள் அமர்ந்து தனது தொலைபேசியைப் பயன்படுத்தும் வீடியோ அந்நாட்டின் சமூக ஊடகத் தளங்களான Weibo மற்றும் Xiaohongshu ஆகியவற்றில் வைரலானபோது எதிர்பாராத விதமாக பிரபலமானார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெறும் எட்டு வினாடி வீடியோவில், ஒரு இளைஞன் குளிர்சாதன பெட்டியின் ஆளில்லாத பகுதிக்குள் இளஞ்சிவப்பு நிற ஸ்டூலில் அமர்ந்திருந்தார். அவருக்கு அருகிலேயே குளிர்பானங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அலமாரிகள், பொதுவாகக் கடைகளில் இருப்பதைப் போலவே இருந்தன. வீடியோவின் பெரும்பகுதி முழுவதும், யாரோ ஒருவர் தன்னைப் பதிவுசெய்ததை அறியும் வரை, அந்த நபர் தனது கைகளில் வைத்திருந்த மொபைலிலேயே கவனம் செலுத்தினார். 


வீடியோவில், மனிதன் அமைதியாக மேல்நோக்கிப் பார்த்துவிட்டு, தன் காலை பயன்படுத்தி குளிர்சாதனப்பெட்டியின் கதவை கூலாக திறக்கிறார். இந்த சூழ்நிலையில் இருந்து பல புதிரான கேள்விகள் எழுகின்றன. 



மேலும் படிக்க | Pakistan Crisis: கழுதைய வித்து பணம் பண்ணும் பாகிஸ்தான்! பொருளாதார நெருக்கடியின் உச்சம்


முதலாவதாக, சுற்றியுள்ள பகுதியில் ஏசியில் இல்லையா என்ற கேள்விகள் எழுந்தன. எது அவரை பெட்டியில் தஞ்சம் அடைய தூண்டியது என்பது வீடியோவில் தெரியவில்லை. கூடுதலாக, வீடியோ குளிர்சாதன பெட்டியில் உள்ள சரியான வெப்பநிலை பற்றிய தகவலையும் வழங்கவில்லை.


மேலும், அந்த நபர் குளிர்சாதன பெட்டி அமைந்துள்ள கடையின் ஊழியரா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. அப்படியானால், அவரது முதலாளி அல்லது மேலாளர் வைரலான வீடியோவைக் காணவில்லை என்று நம்பலாம். 


சீனாவின் குவாங்டாங்கில் கடுமையான வானிலை காரணமாக அந்த நபர் குளிர்சாதனப்பெட்டியில் தஞ்சம் அடைந்தார் என்று கருதப்படுகிறது. சம்பவத்தன்று ஜாங்ஷானில் வெப்பநிலை 37.9 டிகிரி செல்ஷியஸ் ஆக உயர்ந்தது. குவாங்டாங்கில் உள்ள பல நகரங்களில் 37 டிகிரி செல்ஷியக்கும் அதிகமான வெப்பநிலை நிலவுகிறது. குவாங்டாங் வானிலை ஆய்வு மையம் இப்பகுதியில் வெப்பமான காலநிலை நீடிக்கும் என்றும், ஜூன் மாதத்தின் ஆரம்ப நாட்களில் வெப்பநிலை 37 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும் என்றும் கணித்துள்ளது. இந்த வெப்பத்தை தொடர்ந்து, குடியிருப்பாளர்கள் அடிக்கடி மழை மற்றும் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம்.


வைரலான வீடியோவைச் சேர்ந்த அந்த இளைஞன் வரும் வாரத்தில் தொழிற்சாலையின் அடுப்பில் தஞ்சமடைவதை பார்க்கலாம் என நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். அதிக வெப்பநிலையை எதிர்த்துப் போராட, குவாங்டாங்கில் வசிப்பவர்கள் ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்துதல் அல்லது குளிர்ந்த தர்பூசணி சாறு அல்லது ஐஸ்கட்டி டீ போன்ற புத்துணர்ச்சியூட்டும் பானங்களை உட்கொள்வது போன்ற பல்வேறு குளிரூட்டும் முறைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


மேலும் படிக்க | விமான விபத்தில் அமேசான் காடுகளில் தொலைந்த 4 குழந்தைகள்.. 40 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கபட்ட அதிசயம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ