Video: பிக்பாஸ் பிரபலத்தின் கன்னத்தில் அறைந்த இளம்பெண்!
பிக்பாஸ் சீசன் -3 பிரபலத்தின் கன்னத்தில் அவரது மனைவி அறைந்துள்ள விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!
பிக்பாஸ் சீசன் -3 பிரபலத்தின் கன்னத்தில் அவரது மனைவி அறைந்துள்ள விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!
நடிகர் நடிகைகள் என பலர் பிரபல தொலைக்காட்சி தொடரான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ் பெற்றதுண்டு. அவ்வாறு பிக் பாஸ் இந்தி நிகழ்ச்சி சீசன் 3-ல் பங்கேற்று பிரபலமான ஜோடி பக்திர் இராணி மற்றும் அவரது மனைவி தனஜ் இராணி.
இந்த ஜோடி சமீபத்தில் வெளியிட்ட டிக் டாக் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. காரணம் இந்த வீடியோவில் பக்திர் இராணி, ஹிமேஷ் ரேஷ்மாணியாவின் தேரி மேரி பாடலை பாட, அவரது மனைவி பக்திர கன்னத்தில் அரைகின்றார். இந்தி விடியோ தற்போது இணையத்தில் பெரிதும் வைரலாகி வருகின்றது.
இந்த வீடியோவில் பக்திர் முதலில் ஹிமேஷின் 'தேரி மேரி' பாடலைப் பாடுகிறார். ஆனால் அவரை இடைமறிக்கும் அவரது மனைவி அவரை அறைந்து, சித் ரானு மொண்டால் பாடலைப் பாடச் சொல்கிறார். அதன்பிறகு, பக்திர் ஹிமேஷ் ரேஷம்மியாவின் புதிய பாடலைப் பாடுகிறார். இந்த காட்சிகள் பதியப்பட்ட அவர்கள் இருவரின் இந்த வீடியோ மிகவும் ரசிகப்பட்ட வீடியோவாக இணையத்தில் தற்போது உலா வருகிறது.
இந்த விடியோவினை பகிர்ந்துள்ள பக்திர் இது குறித்து தெவிக்கையில்., "எங்கள் முதல் டிக் - டோக் வீடியோ. நீங்கள் விரும்புவீர்கள் என்று நம்புகிறேன். இதை எவ்வாறு சிறப்பாகச் செய்ய முடியும் என்பதை எங்களுக்குத் தெரிவிக்கவும்." என குறிப்பிட்டுள்ளார்.