பள்ளிகளில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மோதல் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இதுபோன்ற விஷயங்களை தினசரி கேட்டும், அனுபவித்தும் வருகிறோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்காக போராட்டங்களும் நடக்கின்றன. பொதுவாக மாணவர்கள் மட்டும் தான் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். லண்டனில் உள்ள ஒரு பள்ளிக்கு வெளியே நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை உட்பட பிற மாணவர்களும் கலந்து கொண்டனர். 


பள்ளி நிர்வாகம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அனைவரும் நியாயம் கேட்கிறார்கள்.


தவறான கால்சட்டை அணிந்து பள்ளிக்கு வந்த மாணவி இங்கிலாந்தில் பள்ளியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார். முதலில் தவறான பேண்ட் அணிந்து வந்த குற்றத்துக்காக அவர் நீண்ட நேரம் பெஞ்சில் உட்கார வேண்டும் என்று தண்டனை விதிக்கப்பட்டது.


Also Read | கடுமையாக உழைக்கும் 75 வயது பாட்டியின் வீடியோ வைரல்


பள்ளி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் சிறுமியின் பெற்றோர் கடும் கோபத்தில் உள்ளனர் மற்றும் அவர்கள் பள்ளிக்கு வெளியே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்தில் பல மாணவ மாணவியர்களும் ஈடுபட்டுள்ளனர். பள்ளியின் இந்த செயலால் தனது மகள் அவமானப்படுத்தப்பட்டதாக மாணவியின் தந்தை கூறுகிறார்.


'பள்ளி மன்னிப்பு கேட்க வேண்டும்'
'மிரர்' அறிக்கையின்படி, லண்டனின் பிரிஸ்டலில் உள்ள பிளேஸ் உயர்நிலைப் பள்ளி (Blaise High School), கடந்த புதன்கிழமையன்று மாணவி ஒருவரை பள்ளியிலிருந்து வீட்டிற்கு திருப்பி அனுப்பியது. சீருடை தொடர்பான விதிகளை மாணவர் மீறியதாக பள்ளி நிர்வாகம் கூறுகிறது, இதன் காரணமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. 


பள்ளியின் நடவடிக்கையால் கோபமடைந்த மாணவியின் தந்தை பள்ளியின் குழந்தைகளை இவ்வாறு அவமானப்படுத்துவது முற்றிலும் தவறு என்றும், பள்ளி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.


Read Also | தங்க மகன் நீரஜ் சோப்ராவின் ஸ்கூபா டைவிங் வீடியோ வைரல்


'என் மகள் தனது பள்ளி சீருடை கால்சட்டை அணிவதற்கு வசதியாக இல்லை என்பதால் அவள் வேறுவொரு கால்சட்டையை அணிந்தாள், ஆனால் பள்ளிக்கு சென்ற அவரை, சீருடை சரியாக அணியவில்லை என்று கூறி, பெஞ்சில் உட்கார வைத்து பின்னர் திருப்பி அனுப்பிவிட்டார்கள். என் மகள் மீது மட்டுமல்ல, இதேபோன்று பல மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.


தனது மகளை, பள்ளி நிர்வாகம், பாடி ஷேமிங் (Body Shaming) எனப்படும் உருவகேலி செய்வதாக மாணவியின் தந்தை டாம் ப்ரூவர் குற்றம் சாட்டினார். தன் மகளை வீட்டுக்கு அனுப்பிய பள்ளி நிர்வாகம், தன்னை நேரடியாக பள்ளிக்கு அழைத்து வேறு கால்சட்டைகளை வாங்கச் சொன்னார்கள் என்று சொல்கிறார். 
ஆனால், பள்ளியில் குறிப்பிடும் சீருடையின் பேண்ட் அணிவதில் தனது மகளுக்கு சிரமமாக இருக்கிறது, எனவே, 'இனிமேல் நான் பள்ளி சொல்லும் அந்த குறிப்பிட்ட கால்சட்டையை வாங்க மாட்டேன்’ என்று நான் தெளிவாக சொல்லிவிட்டேன். 


பள்ளி நிர்வாகம் இந்த விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டும், அதுமட்டுமல்ல, மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவ மாணவியர்களும், பெற்றோர்களும் சொல்கின்றனர்.


Also Read | பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் பரபரப்பு வீடியோ!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR