பெரும்பாலும் குழந்தைகளின் குறும்பு என்றாலே பார்ப்பதற்கு வேடிக்கையாகத் தான் இருக்கும். அதிலும் சில குழந்தைகள் தங்கள் பெற்றோரை தங்கள் பொல்லாத செயல்களாலும் சுட்டித்தனம் செய்வதை காணலாம். அதன்படி ஷாப்பிங் மால்கள், கண்காட்சிகள் மற்றும் பிற இடங்களில் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து தங்களுக்கு பிடித்த பொம்மையை வாங்கித் தரும் படி அடம்பிடிப்பார்கள். அந்த வகையில் சமீபத்தில் இது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் ஹாங்காங்கில் நடந்த ஒரு சம்பவத்தால், தந்தையின் பாக்கெட்டை பாதித்துள்ளது. ஆம்., ஹாங்காங்கின் மோங்காக் மாவட்டத்தில் உள்ள லாங்ஹாம் பிளேஸ் ஷாப்பிங் மாலில், ஒரு சிறிய குழந்தை அங்கிருந்த பெரிய கனமான பொம்மையை தள்ளிவிட்டு உடைந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்நிலையில் ஹாங்காங் நாட்டை சேர்ந்த ஒருவர் தனது மகனின் இந்த தவறால் பெரிய இழப்புக்கு ஆளாகியுள்ளார். 


மேலும் படிக்க | மணமகனுக்கு வந்த சோதனை, மேடையில் அவிழ்ந்துவிழுந்த பேண்ட்: வைரல் வீடியோ


அந்த ஷாப்பிங் மாலில் உள்ள பொம்மைக் கடையிலிருந்து செங் என்ற நபர் ஒரு அழைப்பில் கலந்து கொள்ள வெளியே வந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு அவர் தனது மகனிடம் சென்றார், அங்கு உடைந்த டெலிடூபியின் தங்க சிலைக்கு அருகில் அவர் நிற்பதைக் கண்டார். இதற்குப் பிறகு, கடை உரிமையாளரும் ஊழியர்களும் செங்கிற்கு இழப்பீடு வழங்குமாறு அழுத்தம் கொடுத்தபோது, ​​அவர் $ 33,600 (சுமார் ரூ. 3,29,926) செலுத்த வேண்டியிருந்தது.