திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக சொல்வார்கள். ஒரு மணம் செய்தால் அது உண்மையாக இருக்கலாம், ஆனால் இரு மணம் செய்தால் மாமியார் வீட்டிற்கு விருந்துச் செல்ல முடியாது. காவல்துறை என்ற மாமியார் வீட்டில் களி தான் சாப்பிட வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரே நேரத்தில் இரு பெண்களை திருமணம் செய்யும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது. இதையடுத்து, காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து உமாபதி என்ற மணமகனை கைது செய்தனர். இரு மணம் மட்டுமல்ல, மணப் பெண்களில் ஒருவர் மைனர் என்பது தான் விஷயம். 


உண்மையில் இது திரைப்படக் கதை அல்ல, நிஜ வாழ்க்கையில் நடந்த விநோதமான சம்பவம்! கர்நாடகாவின் கோலாரில் குருதுமலே (Kurudumale temple) கோவிலில் நடைபெற்ற திருமண விழாவில் இரு சகோதரிகளை உமாபதி என்பவர் திருமணம் செய்துக் கொண்டார். 


Also Read | Bizarre Hilarious: 16 மனைவிகள் 151 குழந்தைகள், அடுத்த திருமணத்திற்கு ரெடி!


மே 7 ஆம் தேதி நடந்த இந்த திருமணம், கோலாரில் மிகவும் பரவலாக பேசப்பட்டது. அதையடுத்து, திருமண வீடியோ வைரலாகியது. உமாபதிக்கு, அவருடைய சொந்தக்காரப் பெண் லலிதாவுடன் திருமணம் நடைபெறவிருந்தது. 


பேச்சுத் திறன் குறைபாடுள்ள தனது சகோதரியையும் உமாபதி திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று லலிதா அப்போதுதான் தான் திருமணத்திற்கு சம்மதிப்பேன் என்று சொல்லிவிட்டார்.


இரு குடும்பத்தினரும் இந்த விஷயத்தைப் பற்றி கூடி ஆலோசித்தப் பிறகு, ஒரே நேரத்தில் இரண்டு சகோதரிகளையும் உமாபதிக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று முடிவு செய்தனர். 


Also Read | ICC Test தரவரிசையில் இந்தியா முதலிடம், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குதூகலம்


குடும்பத்தாரின் முடிவுப்படி, மே 7ஆம் தேதியன்று குடும்பத்தினர் ஏற்பாடு செய்தபடி சுபமுகூர்த்தத்தில் உமாபதி, சுப்ரியா மற்றும் லலிதா என இரு சகோதரிகளையும் திருமணம் செய்துக் கொண்டார்.


திருமணத்தின் வீடியோ வைரலாகிய பின்னர், விஷயத்தை விசாரித்த காவல்துறையினர் உமாபதியை கைது செய்தனர். குடும்பத்தின் சம்மதத்துடன், மணப்பெண்களின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றாலும்,   மணப்பெண்களில் ஒருவர் மைனர் என்பது தான் உமாபதியின் பதி என்ற பதவிக்கு சிக்கலாக முளைத்தது.


Also Read | மனைவி, ஆசைநாயகி இருவருக்கும் மரண காப்பீட்டுத் தொகை பிரித்து கொடுக்கப்பட்ட விநோதம்


இதில் மற்றொரு தற்செயல் நிகழ்வாக, மணப்பெண்களின் தந்தை நாகராஜப்பாவும் இரு மணம் புரிந்தவர் தான். அவரும் இரு சகோதரிகளை ஒரே சமயத்தில் திருமணம் செய்து கொண்டார், அவர்களில் ஒருவர் பேச்சு திறான் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்.  


பொதுவாக இந்து திருமணச் சட்டத்தின் பிரிவான இருதார மணத் தடுப்புச் சட்டம், ஒருவர் இரு திருமணங்களை செய்வதை தடுக்கிறது, அது ஒரு குற்றமாகும், ஒரு முதலில் திருமணம் செய்துக் கொண்ட வாழ்க்கைத் துணையை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்தால் அது குற்றம். இரண்டாவது திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடையாது.  


கணவன் அல்லது மனைவி உயிருடன் இருக்கும் பொழுது இவர்களில் யாராவது ஒருவர் வேறு திருமணம் செய்து கொண்டால், ஏழாண்டுகள் சிறை தண்டணையும் அபராதமும் விதிக்கப்படும். இரு திருமணம் செய்வதற்கு இரண்டு விதிவிலக்குகள் மட்டுமே உள்ளன.


Also Read | குளுமையான நுங்கு உண்பதால் ஏற்படும் ஏராளமான நன்மைகள் என்ன தெரியுமா? 


ஒரு திருமணம் செல்லாதது என நீதிமன்றம் (void) அறிவித்திருக்க வேண்டும். 


இரண்டாவதாக கணவனோ மனைவியோ ஏழு ஆண்டுகள் காணாமல் போயிருக்க வேண்டும்.  ஒருவர் காணாமல் போன ஏழு ஆண்டுகள் முடிந்த பிறகு, திருமணம் செய்துக் கொண்டாலும், முதல் வாழ்க்கைத் துணை காணமால் போய் விட்டார் என்னும் தகவலை, திருமணம் செய்துக் கொள்ளும் புதிய நபருக்கு தெரியப்படுத்தியிருப்பது அவசியம் ஆகும்.


சரி, இந்து திருமணச் சட்டத்தின் படி இரு தாரங்களை மணப்பது குற்றம். ஆனால் ஜிம்பாப்வேவில் ஒருவர்  16 மனைவிகள் 151 குழந்தைகள் இருக்கும் இருகும்போது 17வது திருமணத்திற்கு தயார் என்று சொல்கிறாரா இவர் மீது என்ன சட்டம் பாயும்?


Also Read | Bizarre Hilarious: 16 மனைவிகள் 151 குழந்தைகள், அடுத்த திருமணத்திற்கு ரெடி!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR