போபால்: பெட்ரோல் மற்றும் டீசலின் விலைவாசி உயர்வு குறித்து கேட்டபோது, 'தாலிபான் ஆளும் ஆப்கானிஸ்தானுக்குச் செல்லுங்கள்' என்று மத்தியப் பிரதேச பாஜகவை சேர்ந்த ஒருவர் பத்திரிகையாளரிடம் கூறியது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. தற்போது அந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி (Video Viral) வருகிறது. அந்த வீடியோவில், உள்ளூர் நிருபர் ஒருவர் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து ராம்ரதன் பயலின் (Ramratan payal) கருத்துக்களைக் கேட்டார். அந்த கேள்விக்கு கோபமடைத்த பாஜக ராம்ரதன், ஆப்கானிஸ்தானில் 50 ரூபாய்க்கு பெட்ரோல் கிடைப்பதால், அவர்கள் அனைவரும் தாலிபானுக்கு செல்லுமாறு கூறினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மூன்றாவது அலை நாட்டில் வரும் நேரத்தில் எரிபொருள் விலை குறித்து கேள்விகளைக் கேட்பதா? என அவர் பத்திரிகையாளரை கடுமையாக சாடினார்.


தாலிபானுக்குச் (Taliban) செல்லுங்கள் ... உங்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் பெட்ரோல் லிட்டர் 50 ரூபாய்க்கு விற்கிறது. அங்கு (ஆப்கானிஸ்தான்) சென்று உங்கள் பெட்ரோலை நிரப்பிக்கொள்ளவும். அங்கு பெட்ரோலை நிரப்ப யாரும் இல்லை. குறைந்தபட்சம் இங்கே (இந்தியா) எங்களுக்கு பாதுகாப்பு உள்ளது. இந்தியா ஏற்கனவே எதிர்கொண்டிருக்கும் இரண்டு கோவிட் அலைகளுக்கு மத்தியில், தற்போது மூன்றாவது கொரோனா அலை வரப்போகிறது. நாடு என்ன நெருக்கடியைக் கடந்து சென்றுக்கொண்டு இருக்கிறது, அதை எல்லாம் நீங்கள் பார்ப்பது இல்லயா? என்று பாஜக தலைவர் செய்தியாளரிடம் கூறினார். 


ALSO READ | Viral Video: வயதானாலும், உறுதியும் உத்வேகமும் குறையாமல் இணையத்தை கலக்கும் 85 வயது முதியவர்


மூன்றாவது கோவிட் அலையைப் (Covid Third Wave) பற்றி அமைச்சர் மிகவும் கவலைப்பட்டதாக அவர் கூறினாலும், அதற்கு முரணாக, அவரும் அவரது ஆதரவாளர்களும் முகமூடி இல்லாமல் காணப்பட்டனர். நியூஸ் 18 அறிக்கையின்படி, இந்த வீடியோ சுதந்திர தினத்தையொட்டி எடுக்கப்பட்டது.


 



இதேபோன்ற ஒரு சம்பவத்தில், பீகார் பாஜக எம்எல்ஏ (Bihar BJP MLA) புதன்கிழமை 'இந்தியாவில் இருக்க பயப்படுகிறவர்கள், ஆப்கானிஸ்தானுக்கு செல்ல வேண்டும்' என்றுக் கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். எரிபொருள் விலை உயர்வு இந்தியாவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. விலை உயர்வுக் குறித்து பயப்படுவதாக நினைப்பவர்கள் அங்கு (ஆப்கானிஸ்தான்) செல்லலாம்... அங்கு பெட்ரோல் மற்றும் டீசல் மலிவானது. அங்கு சென்றவுடன் தான், இந்தியாவின் மதிப்பை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்றார்.


ALSO READ | "மெல்ல மெல்ல வரலாற்றில் காணாமல் போவோம்” : ஆப்கான் பெண்ணின் உருக்கமான வீடியோ


இதற்கிடையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .100 ஐ எட்டியுள்ளது, டீசல் விலை நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் ரூ. 90 ஐ நெருங்கியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR