Ukraine Russia War: தண்ணீர் ஊற்றி வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் உக்ரைன் வீடியோ! சும்மா அதிருதில்ல!!
Real heros of the war: ரஷ்யா வீசிய பெரிய வெடிகுண்டை வெறும் கைகளால் தண்ணீர் ஊற்றி செயலிழக்கச் செய்யும் உக்ரைனை மக்களின் தீரச் செயல் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது...
Ukraine Russia War: ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி அந்நாடு முழுவதும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், மூன்றாம் உலகப்போர் பற்றிய அச்சம் சர்வதேச அளவில் வலுப்பெற்றுள்ளது.
ரஷ்யாவின் தாக்குதல் தொடர்பான பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. அதில் ஒரு வீடியோ அனைவரையும் பேச்சிழக்க செய்கிறது. இந்த வீடியோவில், ரஷ்யா வீசிய பெரிய வெடிகுண்டை உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தண்ணீரை ஊற்றி செயலிழக்கச் செய்வதைக் காணலாம்.
அதிர்ச்சியளிக்கும் வீடியோ
வைரலான வீடியோவில், இரண்டு உக்ரைன் குடிமக்கள் தங்கள் கைகளால் தண்ணீர் பாட்டில் உதவியுடன் ஒரு பெரிய வெடிகுண்டை செயலிழக்கச் செய்வதைக் காணலாம். இந்த வீடியோவை பார்த்த சமூக வலைதளவாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த வீடியோவை உக்ரேனிய வெடிகுண்டு நிபுணர் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். ரஷ்ய தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைன் குடிமக்களின் துணிச்சலுக்கும் விடாமுயற்சிக்கும் இந்த வீடியோவே சான்றாக இருக்கிறது.
மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?
உக்ரைன் குடிமக்கள் தங்கள் கைகளால் செயலிழக்கச் செய்யும் வெடிகுண்டு சாதாரண வெடிகுண்டு அல்ல. சிரியா மற்றும் தீவிரவாத எதிர்ப்பு மற்றும் தீவிரவாதத் திட்டத்தின் இயக்குநரான சார்லஸ் லிஸ்டர் கருத்துப்படி, செயலிழக்கச் செய்யப்பட்ட வெடிகுண்டு, பெரிய கட்டிடங்களைக் கூட நொடியில் தரைமட்டமாக்கும் சக்தி வாய்ந்தது.
வெடிகுண்டை செயலிழக்க செய்யும் இந்த வீடியோ இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடிகுண்டை இப்படி செயலிழக்கச் செய்வது மிகவும் துணிச்சலான செயல் என்று வெடிகுண்டு நிபுணர் சார்லஸ் லிஸ்டர் கூறுகிறார்.
போர்க்களத்தில் இல்லை என்றாலும், உக்ரைனே தற்போது போர்க்களமாக மாறிவிட்டது. பார்க்கும் இடமெல்லாம் ரஷ்யாவின் தாக்குதலின் எதிரொலி தெரிகிறது. வீசப்பட்ட வெடிகுண்டுகளில் வெடிக்காமல் ஆனால் உயிர்ப்புடன் இருப்பவை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்.
மேலும் படிக்க | உக்ரைனுக்கு புதுவிதமாக உதவும் பிரபல வெப்சைட்
மக்கள் வசிக்கும் பகுதியில் திடீரென அவை வெடித்தால் ஏற்படும் பாதிப்புகள் என்னவாக இருக்கும் என்பதை யாராலும் கணித்துவிட முடியாது. அதிலும் இந்த உக்ரேனியர்கள் செயலிழக்கச் செய்யும் வெடிகுண்டு மிகவும் சக்தி வாய்ந்தது என்பதால், இவர்களின் துணிச்சலும், நிதர்சனமும் போரின் கோர முகத்தைக் காட்டுவதாக உள்ளது.
குண்டுக்கு மேல் தண்ணீர் கொட்டிக் கொண்டே இருந்தது
வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் போது, ஒரு நபர் தொடர்ந்து பாட்டிலிலிருந்து தண்ணீரை வெடிகுண்டின் மீது ஊற்றுவதை வீடியோவில் காணலாம்.
உக்ரைன் மீது ரஷ்யா TOS-1A குண்டுகளை வீசுகிறது என்று ரஷ்ய MoD சமீபத்தில் கூறியது. இந்த குண்டுகள் மனிதர்களின் நுரையீரலை முற்றிலுமாக அழித்து விடுகின்றன. ரஷ்யாவின் உக்ரைன் மீதான போர், மக்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, அவர்களின் ஆரோக்கியத்தையும் உள்ளுறுப்புகளையும் பெரிய அளவில் பாதிக்கும்.
மேலும் படிக்க | உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி போலந்தில் தஞ்சம் புகுந்தார்; ரஷ்யா பரபரப்பு தகவல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR