இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா வீடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன. பாம்பு என்றால் படையே நடுங்கும் என்றாலும், பாம்பு வீடியோக்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நேரில் பார்க்க முடியாத காட்சிகளை பார்ப்பதில் மக்களுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம் இருக்கும். தற்போது சமூக வலைதளங்களில் பாம்பு வீடியோ வைரலாகி வருகிறது. ராஜா நாகப்பாம்பை மலைப்பாம்பின் எப்படி இறுக்கமாக நெறிக்கிறது என்பதை வீடியோ காட்டுகிறது. அதே நேரத்தில், ராஜநாகமும் மலைப்பாம்பை தாக்குகிறது. ஆனால், மலைப்பாம்பு அதனை அமுக்கி நெறிக்கிறது. இந்த வீடியோவை 'Instagram' என்ற சமூக ஊடகத் தளத்தில் @snake__videos என்ற பயனர் பகிர்ந்துள்ளார். வீடியோவில் மலைபாம்பின் நீளத்தையும், ராஜ நாகத்தின் தோற்றத்தையும் பார்த்தாலே கதி கலங்கும். 4 நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட இந்த வீடியோ, இதுவரை 7 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளது. இந்த வீடியோவும் ஏராளமானோர் ஷேர் செய்து வருகின்றனர். வீடியோவின் விருப்பங்கள், பார்வைகள் மற்றும் பகிர்வுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொடூரமான அந்த சண்டையின் வீடியோவை இங்கே பாருங்கள்




‘ராஜா நாகப்பாம்பை கழுத்தை நெரித்தது மலைப்பாம்பு’


மலைப்பாம்புக்கும், ராஜ நாகப்பாம்புக்கும் இடையே கடும் சண்டை நடப்பது வீடியோவில் தெரிகிறது. மலைப்பாம்பு ராஜ நாகப்பாம்பின் கழுத்தில் இறுக்கமாகச் சுற்றியுள்ளது. ராஜ நாகமும் அதனை எதிர்த்து போராடுகிறது. ​​இரண்டு பாம்புகளும் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்கின்றன. இந்த வீடியோ பார்க்கவே பயங்கரமாக உள்ளது. இந்த வீடியோவை @snake__videos மூலம் 'Python chocke king cobra ' என்ற தலைப்புடன் பகிர்ந்துள்ளார்.


தவளை ஒன்று பாம்பை கபளீகரம் செய்யும் வீடியோ


இதற்கு நேர்மாறாக, சில நாட்களுக்கு முன் தவளை ஒன்று பாம்பை கபளீகரம் செய்யும் வீடியோ ஒன்றும் வைரலானது. சுமார் 2 நிமிடங்கள் நீடித்த அந்த வீடியோ ஒரு திரில்லர் படம் பார்ப்பதைப் போல் இருந்தது. இந்த வீடியோவில் தவளை மெதுவாக பாம்பை ரசித்து ருசித்து பாம்பை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குவதைக் காணலாம். பொதுவாக, பாம்பு என்றால் படையே நடுங்கும். விலங்குகளில் பலவும் கூட பாம்பை சீண்டி பார்க்கும் தைரியத்தை கொண்டிருப்பதில்லை. பாம்பின் பெயரை கேட்டால் எட்டாத தூரம் ஓடும் மனிதர்கள் பலரை நாம் பார்த்திருப்போம். ஆனால், இங்கே தவளை ஒன்று பாம்பை சர்வசாதாரணமாக விழுங்குவதை பார்த்தால் நிச்சயம் நீங்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். இந்த வீடியோவை கீழே உள்ள இணைப்பில் காணலாம். 


மேலும் படிக்க | கலிகாலம் தான்... நூடுல்ஸ் போல் பாம்பை உயிருடன் கபளீகரம் செய்யும் தவளை... திகிலூட்டும் வீடியோ!


அதே போன்று சில நாட்களுக்கு முன் வைரலான ஒரு வீடியோவில், முட்டையை திருடுவதற்காக, கூடைக்குள் நுழைந்த ஒரு பாம்பு, வாயில் முட்டையுடன் கூடையில் சிக்கிக் கொண்டது. உயரத்தில் முட்டையுடன் கூடிய கூடை வைத்திருந்த நிலையில், அதனை சாப்பிட பாம்பு அங்கு வந்துள்ளது. கூடையின் பக்கங்களில் உள்ள துளைகள் மூலம் பாம்பு அதன் முகத்தையும் அதன் உடலின் ஒரு சிறிய பகுதியை நுழைத்துக் கொண்டு செல்கிறது. இருப்பினும், அது முட்டையை விழுங்கிய போது, அதன் தொண்டை பகுதி பெரிதானதால், கூடையிலிருந்து வாயை வெளியே எடுக்க முடியவில்லை. முட்டையைக் கை விடாமல் கூடையிலிருந்து வெளியேற பாம்பு போராடுவது வீடியோவில் காணலாம். இறுதியில், பாம்பு முட்டையை வெளியே துப்ப வேண்டியிருந்தது. இந்த வீடியோவை கீழே உள்ள இணைப்பில் காணலாம். 


மேலும் படிக்க | கடவுள் இருக்கான் குமாரு... முட்டையை அபேஸ் செய்த பாம்பிற்கு ஏற்பட்ட கதி!


(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ