Viral Video: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. திருமண வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருமணங்களின் பல வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றப்படுகின்றன. ஆனால் இவற்றில் சில திருமண வீடியோக்கள் (Wedding Viral Video) மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்று விடுகின்றன. இவை உடனே பலரால் பகிரப்பட்டு வைரலும் ஆகின்றன. திருமண வீடியோக்களில் நாம் பல வித காட்சிகளை காண்கிறோம். திருமணம் என்றாலே மகிழ்ச்சி, கோலாகலம் தான். இது மணமக்களின் வாழ்வில் மிக முக்கியமான தருணமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இரு குடும்பங்களின் சங்கமமாகவும் உள்ளது. 


இன்றைய காலகட்டத்தில் மணமக்கள் தங்கள் திருமணங்களில் மறக்க முடியாத, வித்தியாசமான பல விஷயங்களை செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். இதில் மணமண்டபத்திற்குள் நுழையும் விதமும் அடங்கும். மணமேடையில் வித்தியாசமான எண்ட்ரி கொடுக்க வேண்டும் என மணமக்கள் விரும்புகிறார்கள். அப்படி, வித்தியாசமான முறையில் மாஸாக எண்ட்ரி கொடுத்த ஒரு ஜோடியின் வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது. 


சமீபத்தில் ஒரு திருமண ஜோடி புல்லட் பைக்கில் திருமண மண்டபத்திற்குள் தனித்தனியாக நுழைந்த வீடியோ வைரலானது. ராயல் என்ஃபீல்டு புல்லட்டில் சவாரி செய்து வந்த அந்த ஜோடியை இப்போது நெட்டிசன்கள் ராயல் ஜோடி என்று அழைத்து வருகிறார்கள். குறிப்பாக, மணமகள் மிக லாவகமாக பைக்கை ஓட்டி வந்த விதம் அனைவரது உள்ளத்தையும் கவர்ந்துள்ளது. 


மேலும் படிக்க | கலைக்கு வயதாவதில்லை! நிரூபிக்கும் பாட்டியின் வைரல் ஓவியம் வீடியோ...


மணமக்களின் துடிப்புமிக்க எண்ட்ரி வீடியோவை இங்கே காணலாம்: