மாலையை காட்டி காட்டி கடுப்பேத்திய மணப்பெண்: நொந்துபோன மாப்பிள்ளை, வைரல் வீடியோ
Funny Marriage Video: சமீபத்தில் இணையத்தில் பகிரப்பட்ட ஒரு திருமண வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதில் மணமகள் செய்யும் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.
வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. திருமண வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சமூக ஊடகங்களில் பல திருமண வீடியோக்களை நாம் காண்கிறோம். யாரும் எதிர்பாராத வண்ணம் சில திருமணங்களில் நடக்கும் வினோத நிகழ்வுகள் இணையத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகின்றன. இவற்றில் சில சமயம் மணமக்களுக்கு இடையில் நடந்த வேடைக்கையான பல விஷயங்களை நாம் பார்க்கிறோம், சில சமயம் விருந்தினர்கள் செய்யும் கேலி கிண்டல்களை கண்டுகளிக்கிறோம்.
தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இதில் மணமகளின் வித்தியாசமான போக்கை காண முடிகின்றது. ஒரு திருமணத்தில் மாலை மாற்றும் சடங்கு நடக்கிறது. மணமகனுக்கு மாலை அணிவிக்கும்போது மணமகள் மிக வித்தியாசமாக நடந்துகொள்கிறார். இதை பார்த்த அனைவரும் ஒன்றும் புரியாமல் வியக்கிறார்கள். இந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.
மணமகள் செய்த விசித்திரமான செயல்
சமூகவலைத்தளங்களில் மக்களின் கவனத்தை ஈர்த்து வரும் இந்த வீடியோ, மணமகன் ஊர்வலமாக திருமண மண்டபத்தை அடைவதை காட்டுகிறது. மணப்பெண்ணும் அங்கு வருகிறார். இருவருக்கும் மாலை மாற்றும் சடங்கு நடக்கவுள்ளது. மணமகளிடம் மாலையை கொடுக்கிறார்கள். அதை அவர் மணமகனுக்கு அணிவிக்காமல், நடனமாடத் தொடங்குகிறார். மணமகள் தனக்கு எப்போது மாலை அணிவிப்பார் என்று மணமகன் காத்திருக்கிறார். விருந்தினர்களும் மணப்பெண்ணின் செயல்களை கண்டு அச்சரியம் அடைகிறார்கள்.
மேலும் படிக்க | சிங்கத்துக்கே சவால் விடும் கழுதைப்புலி! சிங்கப் பெண்ணின் பரிதாப நிலை வீடியோ வைரல்
மணமகளின் செயலால் டென்ஷன் ஆன மாப்பிள்ளை
மணமகள் மாலையை பல்வேறு விதமாக சுழற்றி நடனமாடுகிறார், ஆனால் அவரது முகபாவம் அவர் மகிழ்ச்சியுடன் நடனமாடுவதை போல இல்லை. அவர் வேறு எந்த மனநிலையிலோ நடனமாடுவதை போல தெரிகிறது. மணமள் இப்படி நடனமாடுவது ஒரு வழக்கமோ என்றுகூட தோன்றுகிறது. மணமகன் உட்பட அனைத்து விருந்தினர்களும் ஒன்றும் புரியாமல் நிற்கிறார்கள். சமூக ஊடகங்களில் வைரல் ஆக்குவதற்காக உருவாக்கப்பட்ட ஸ்க்ரிப்டட் வீடியோ போலவும் இது தோன்றுகிறது.
இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
மேலும் படிக்க | பசுவை அப்படியே விழுங்கிய மலைப்பாம்பு: பீதியை கிளப்பும் வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ