வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. திருமண வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நம் நாட்டில் திருமணங்கள் திருவிழாக்களை போல கொண்டாடப்படுகின்றன. திருமணம் என்றாலே மகிழ்ச்சி, கோலாகலம் தான். இது மணமக்களின் வாழ்வில் மிக முக்கியமான தருணமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இரு குடும்பங்களின் சங்கமமாகவும் உள்ளது. பல உறவுகளும் நட்புகளும் சேர்ந்து மகிழ்ந்து அனுபவிக்கும் கோலாகலமான கொண்டாட்டமாக இது இருக்கின்றது. 


இணையத்தில் நாம் தினம் தினம் பல வித திருமண வீடியோக்களை காண்கிறோம். இவை அனைத்தும் பல வகைகளில் வித்தியாசமாக இருக்கின்றன. மணமக்களுக்கு இடையில் இருக்கும் காதல், பாசம், கோவம், திருமணம் தொடர்பான உற்சாகம் என அனைத்தையும் இவற்றில் காண்கிறோம். இவை தவிர மணமக்களின் உறவினர்களும் நண்பர்களும் திருமணங்களில் அடிக்கும் லூட்டிக்கும் எப்போதும் பஞ்சம் இருக்காது. தற்போது இணையத்தில் பகிரப்பட்டுள்ள வீடியோவும் மிகவும் வித்தியாசமாக உள்ளது.


ஒருவரின் திருமண வரவேற்பு விழாவில் திடீரென ஒரு பெண் வந்து மாப்பிள்ளையை கட்டிப்பிடித்துக் கொண்டால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். மாப்பிள்ளைக்கு மட்டுமல்ல, அங்குள்ள அனைவருக்கும் தலை சுற்றும். அப்படி ஒரு வினோத சம்பத்தை இந்த வீடியோவில் காண முடிகின்றது. 


மண மேடையில் மணமகனும், மணமகளும் நின்றுகொண்டு விருந்தினர்களின் வாழ்த்துக்களை பெற்றுக்கொள்வதை விடியோவின் துவக்கத்தில் காண முடிகின்றது. அப்போது திடீரென பர்தா அணிந்த பெண் மேடையில் ஏறி மாப்பிள்ளையை இறுக்கமாக கட்டிப்பிடித்துக்கொள்கிறார். இதை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இப்படி ஒரு மாறுபட்ட வீடியோவை இன்று இந்த பதிவில் காணலாம். ஆனால், வீடியோவின் முடிவில் யாரும் எதிர்பாராத ட்விஸ்ட் ஒன்றும் உள்ளது. 


மணமகனை கட்டிப்பிடித்த பெண்


மணமேடையில் நின்றுகொண்டிருந்த மணமகனும் மணமகளும் சந்தோஷமாக விருந்தினர்களின் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டு, பரிசுகளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது அங்கு திடீரென பர்தா அணிந்த பெண் ஒருவர் வருகிறார். அவர் மணமேடையில் ஏறி நேராக மாப்பிள்ளையிடன் செல்கிறார். அதன் பிறகு அவர் செய்த செயல் யாரும் எதிர்பார்க்காத ஒன்று.


மேடையில் ஏறிய பர்தா அணிந்த பெண் மணமகனின் அருகில் வந்து அவரை அப்படியே கட்டிக்கொள்கிறார். இதை பார்த்த அனைவரும் அதிர்ச்சியின் உச்சத்திற்கே செல்கின்றனர். மாப்பிள்ளையும் பயங்கரமாக ஷாக் ஆகிறார். ஆனால், அவரால் எதையும் வெளியே காட்டிக்கொள்ள முடியவில்லை. அதிர்ச்சி அடைந்தாலும், வெளியே சிரிக்கிறார். மணப்பெண்ணின் நிலையை பற்றி கேட்கவே வேண்டாம். அவருக்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. அவரும் அதிர்ச்சி அடைந்தாலும், தனது சிரிப்பால் அதை அடக்க முயற்சிக்கிறார். என்ன நடக்கின்றது என்றே புரியாமல் மாப்பிள்ளை குழப்பத்தில் இருக்கிறார்.


மேலும் படிக்க | இசை எனும் இன்ப வெள்ளத்தை ரசிக்க ஓடோடி வந்த மான் - வைரல் வீடியோ


அப்போது யாரும் எதிர்பாராத ஒரு விஷயம் நடக்கின்றது. பர்தா பெண் தனது பர்தாவை விலக்குகிறார். அப்போதுதான் அது ஒரு பெண் அல்ல, மாப்பிள்ளையின் நண்பர்களின் ஒருவர்தான் இப்படி பர்தா அணிந்து வந்துள்ளார் என்பது தெரிகிறது. மாப்பிள்ளையை ஏமாற்ற அவரது நண்பர்கள் போட்ட திட்டம் அது. இதைப் பார்த்த பின் யாராலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. மாப்பிள்ளை நிம்மதி அடைந்து சிரிக்கிறார். ஆனால் மணமகள் சிரிக்கும் சிரிப்பில்தான் மிகப்பெர்ய நிம்மது தெரிகிறது. அவர் எவ்வளவு கலங்கி இருந்தார் என்பதை அந்த நிம்மதி சிரிப்பில் புரிந்து கொள்ள முடிகின்றது.


மாப்பிள்ளையை கதி கலங்க வைத்த பெண்ணின் வீடியோவை இங்கே காணலாம்:



இணையத்தில் வீடியோ வைரல் ஆனது


மிகவும் வேடிக்கையான இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் @bridal_lehenga_designn என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. விடியோவின் தலைப்பில், ‘உங்கள் குறும்புக்கார நண்பர்களை இதில் டேக் செய்யுங்கள்’ என எழுதப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல விதமான கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


மேலும் படிக்க | சரக்கடித்து மட்டையான குரங்கு... விளாசித்தள்ளும் நெட்டிசன்ஸ்: ஷாக்கிங் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ