பிரான்ஸ் நாட்டில் 2018-ம் ஆண்டிற்காக கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் பச்சன், தனது மகள் ஆராதியாவுடன் கலந்து கொண்டுள்ளார். இது ஐஸ்வர்யா ராய் கலந்து கொள்ளும் 17-வது கேன்ஸ் திரைப்பட விழா ஆகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக உடை ஒன்று அணிந்து ரெட் கார்பெட்டிற்கு வந்திருந்தார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் பட்டாம்பூச்சி போன்ற உடை அணிந்து அழகாக நடந்தார். அவர் உடை அனைவரையும் கவர்ந்துள்ளது.