‘நீ ஒத்து பாப்பா`: கெத்து காட்டும் புத்திசாலி பூனை.. வாய் பிளக்கும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ
Funny Cat Video: இந்த வீடியோவில் வரும் பூனையின் உறுதியும் சிக்கலைத் தீர்க்கும் திறனும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்களின் இதயங்களைக் கவர்ந்து கவனத்தை ஈர்த்துள்ளது.
வைரல் வீடியோ: மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம். சில விஷயங்கள் அவ்வப்போது நம்மை திசை திருப்பி நமக்கு ஒரு மாறுதலை அளிக்கின்றன. அத்தகைய விஷயங்களில் சமூக ஊடகங்களுக்கு ஒரு முக்கிய பங்குண்டு.
சமூக ஊடகங்களில் பல வித வீடியோக்கள் பகிரப்பட்டாலும், விலங்குகளின் வீடியோக்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதுவும் குறிப்பாக, பாம்பு, குரங்கும், நாய், பூனை, யானை, சிங்கம், புலி ஆகிய மிருகங்களுக்கு மிக அதிக கிரேஸ் உள்ளது. இந்த வீடியோக்களில் விலங்குகளின் வித்தியாசமான பாணியும், புத்திசாலித்தனமும், அப்பாவித்தனமும் காணப்படுகின்றன.
இந்த வீடியோக்கள் இனையவாசிகளை பிரமிக்க வைக்கின்றன. நம்மை அசத்தி ஆச்சரியப்பட வைக்கும் வீடியோக்களுக்கு இணையத்தில் பஞ்சமே இல்லை. தற்போது அப்படி ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ ஆன்லைன் உலகத்தில் புயலை கிளப்பியுள்ளது. இந்த வீடியோவில் ஒரு பூனையின் நம்ப முடியாத புத்திசாலித்தனத்தை காண முடிகின்றது. இந்த மனதைக் கவரும் காட்சியில், ஒரு பூனையின் உறுதியும் சிக்கலைத் தீர்க்கும் திறனும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்களின் இதயங்களைக் கவர்ந்து கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும் படிக்க | குப்பை எடுக்கும் பெண்ணுக்கு உதவிய நாய்: பார்த்து உருகும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ
வைரல் ஆகும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:
வீடியோவின் துவக்கத்தில் அனைத்தும் சாதாரணமாகவே இருக்கிறது. அழுத்தமாக மூடப்பட்டு இருக்கும் கதவை ஒரு பெண் குழந்தை திறக்க முயற்சிக்கிறார். ஆனால், அந்த பெண் குழந்தை எவ்வளவு முயற்சித்தாலும், அவரால் அந்த கதவை திறக்க முடியவில்லை. கதவு உறுதியாக மூடப்பட்டுள்ளது.
அந்த சிறுமியின் அருகில் பூனை ஒன்று உள்ளது. அது அந்த சிறுமியின் செல்ல பூனை போல தோன்றுகிறது. சிறுமி கதவை திறக்க முடியாமல் ஏமாற்றம் அடைவதை கண்ட பூனை நிலைமையை தன் கையில் எடுத்துக்கொள்கிறது. சிறுமியின் போராட்டத்தை உணர்ந்த பூனை, அவருக்கு உதவி செய்ய வேகமாக முன்வருகிறது.
காரணம் மற்றும் விளைவு பற்றிய நுட்பமான புரிதலுடன், அந்த புத்திசாலி பூனை நிலைமையை பொறுமையாக பகுப்பாய்வு செய்கிறது. அது சிறுமியின் வீண் முயற்சிகளைக் கவனித்து, வாயிலின் பொறிமுறையை மதிப்பிடுகிறது. குறிப்பிடத்தக்க சாமர்த்தியம் மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறனை வெளிப்படுத்தும் பூனை, தாழ்ப்பாளை கீழ் நோக்கி இழுக்க தனது பாதத்தைப் பயன்படுத்துகிறது. தனது முயற்சியில் வெற்றி அடையும் வரை கவனமாக அழுத்திய படியே இருக்கிறது.
பூனையை பாராட்டும் நெட்டிசன்கள்
பல்வேறு சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்ட வீடியோ, விரைவாக வைரலாக பரவியது. சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமிலும் இந்த வீடியோ meowcattssss என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்த வண்ணம் உள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள். விலங்கு பிரியர்கள் மற்றும் ஆர்வலர்களின் கவனத்தை இந்த வீடியோ ஈர்த்துள்ளது. பூனையின் புத்திசாலித்தனத்தால் பார்வையாளர்கள் கவரப்பட்டனர். பூனையின் அசாதாரண திறன்களுக்காக பல வித பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
மேலும் படிக்க | அட்ரா சக்க.. என்னமா நீச்சல் அடிக்குது இந்த குரங்கு: வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ