WATCH: பயமா எனக்கா... ‘பாம்பை அசால்ட்டாக கையில் தூக்கிய பிரியங்கா காந்தி!’
ரேபரேலி தொகுதியில் பரப்புரையின்போது பிரியங்கா காந்தி பாம்பாட்டிகளை சந்தித்தார்!!
ரேபரேலி தொகுதியில் பரப்புரையின்போது பிரியங்கா காந்தி பாம்பாட்டிகளை சந்தித்தார்!!
நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், உத்தரபிரதேசத்தில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரியங்கா காந்தி, பாம்பாட்டிகளிடம் இருந்த பாம்புகளை எவ்வித அச்சமும் இன்றி கைகளில் எடுத்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பிராந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தனது தாயார் போட்டியிடும் ரேபரேலி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பிரச்சாரத்தின்போது அங்கிருந்த பாம்பாட்டிகளிடம் பிரியங்கா காந்தி உரையாற்றினார். அப்போது, பாம்பாட்டிகளின் கூடைகளில் இருந்த பாம்புகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.
மேலும், பாம்புகளை எவ்வித அச்சமும் இன்றி சிரித்துக் கொண்டே கைகளில் எடுத்து பாம்புகளை அடைக்கும் கூடைக்குள் வைத்தார்.