நடிகர் ரஜினிகாந்த்-ன் இளைய மகளான செளந்தர்யாவின் மகன் வேத் பிறந்த நாள் நேற்று ரஜினியின் இல்லத்தில் கோலாகலமாக  கொண்டாடப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பிறந்த நாள் விழாவில் தனுஷ், அவரது மனைவி ஐஸ்வர்யா, அனிருத் உள்பட குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர்.


கடந்த 2010-ம் ஆண்டு சௌந்தர்யாவு மற்றும் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாருக்கும் நடைபெற்றது. இவர்களுக்கு 2015-ம் ஆண்டு மே மாதம் 6-ம் தேதி வேத் என்ற ஆண் குழந்தை பிறந்தார். 


கடந்த சில மாதங்களாக சௌந்தர்யாவுக்கும், அவரது கணவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2017-ம் ஆண்டு செளந்தர்யா மற்றும் அஸ்வின் தம்பதிகள் பரஸ்பரம் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.


இந்த நிலையில் நேற்று செளந்தர்யாவின் மகன் வேத் பிறந்தநாள் ரஜினியின் இல்லத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.