Apple phone-களின் அதிகப்படியான விலைகளைப் பற்றி பலர் வேடிக்கையாக பேசுவதுண்டு. சொத்தை விற்றால்தான் ஃபோன் வாங்க முடியும் எனவும் சிலர் கிண்டலடிப்பதுண்டு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிட்னியை விற்று ஃபோனை வாங்கப்போவதாக சிலர் விளையாட்டாக கூறும் ஜோக்குகளும் மீம்களும், ஒவ்வொரு முறை ஆப்பிள் ஃபோன் லாஞ்ச் செய்யப்படும்போதும் வருவதுண்டு. ஆனால் அப்படி நிஜத்தில் நடக்கும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.


ஆம்!! நிஜத்தில் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதன் விளைவுகளும் பயங்கரமாக இருந்தன. 2011 ஆம் ஆண்டில், ஒருவர் தான் இளைஞனாக இருந்தபோது, Apple iPad மற்றும் iPhone ஐபோன் வாங்குவதற்காக சிறுநீரகத்தை விற்றார். அவர் இப்போது உயிருக்கு ஆபத்தான் நிலையில் உடலின் பல உறுப்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் படுத்த படுக்கையாய் இருக்கிறார்.


Apple தயாரிப்புகளை வாங்குவதற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டு, வலது சிறுநீரகத்தை கறுப்பு சந்தையில் விற்றபோது வாங் ஷாங்க்குனுக்கு 17 வயது. சட்டவிரோத அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவரது சிறுநீரக (Kidney) செயல்பாடு குறைந்து வருவதாக நியூஸ்.காம் செய்தி வெளியிட்டுள்ளது.


ALSO READ: இந்த பூனைய கண்டுபிடிச்சா 15,000 ரூபாய் வெகுமதி: யாரோட பூனை தெரியுமா….


“ஏப்ரல் 2011 இல் ஷாங்க்குன் தனது சிறுநீரகத்தை கறுப்பு சந்தையில் கள்ளத்தனமாக உறுப்புகளின் வியாபாரம் செய்பவர்களுக்கு விற்றார். அதில் அவருக்கு 4,500 ஆஸ்திரேலிய டாலர்கள் கிடைத்தன. அந்த தொகையைக் கொண்டு அவர் ஒரு iPhone மற்றும் iPad-ஐ வாங்கினார்” என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.


அந்த நபருக்கு அவரது இரண்டாவது சிறுநீரகத்தில் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டது. அறுவை சிகிச்சை நடந்த சுகாதாரமற்ற நிலைமைகளே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.


குறிப்பிடத்தக்க வகையில், இந்த அதிர்ச்சியளிகும் விஷயம் சீனாவில் (China) மிகவும் பொதுவானது. அங்கு கறுப்பு சந்தை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஒரு செழிப்பான வர்த்தகமாக நடந்துகொண்டிருக்கிறது. 


ALSO READ: கஞ்சத்தனம் வேண்டாம் காஜல் என்று Lakshmi Manchu சொன்ன காரணம் தெரியுமா?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR