தாய்பால் ஊட்டும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகை!
மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்க நடிகையின் தாய்பால் ஊட்டும் புகைப்படம்!
மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்க நடிகையின் தாய்பால் ஊட்டும் புகைப்படம்!
பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் என அனைத்து திரையுலக நட்சதீரங்களும் மக்களின் கவனத்தை கவனத்தை ஈர்க்க பல்வேறு புதுவித முயற்சிகளை எடுத்துள்ளனர். முதலில் மக்களின் கவனத்தை ஈர்க்க நடிகைகள் தன்களின் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டனர். இதை தொடர்ந்து தற்போது தனது குழந்தைகளுக்கு தாய்பால் கொடுக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
இது போன்ற ஒரு புகைப்படத்தை பிரபல அமெரிக்க மாடலும் நடிகையுமான கிறிஸ்ஸி டெய்ஜ்ன் என்பவர் தனது குழந்தைகளுக்கு தாய்பால் கொடுக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாக்ராமில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த பலர் அவர் தனது இரண்டுகுலந்தைகளுக்கும் தாய்பால் கொடுப்பதாக நினைத்தார்கள். ஆனால், அது உண்மையல்ல. ஏனென்றால் அந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தைகளில் ஓன்று அவரது மூத்த மகள் லூனாவின் பொம்மை.
"எனது மூத்த மகள் லூனா, அவளது பொம்மை குழந்தைக்கும் தாய்ப்பால் ஊட்ட வேண்டும் என்று விரும்பியதால் எனக்கு இப்போது இரட்டையர்களை வளர்ப்பது போல் ஓர் உணர்வு" என்று அந்த புகைப்படத்திற்கு விளக்கம் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பதிவிட்ட ஒரே நாளில் அப்படம் 3 லட்சம் லைக்குகளை இன்ஸ்டாக்ராமிலும் 18,000 ட்விட்டர் லைக்குகளையும் பெற்றது. மேலும் இந்த பதிவிற்கு வெவ்வேறு விதமான எதிர்ப்புகளும் வந்துள்ளது.
இதற்க்கு முன்னதாக சென்ற ஆண்டு மலையாள நடிகை ஒருவர் தனது குழந்தைக்கு தாய்பால் ஊட்டுவதை பத்திரிகை அட்டைப்படத்தில் போடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மீது வழக்கும் தொடர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது..!