செருப்பின் கீழ் நாகப்பாம்பின் வைரல் வீடியோ: மழைக்காலத்தில் பல வகையான பூச்சிகள் அவற்றின் துளைகளில் இருந்து வெளியேறும். ஊர்ந்து சென்று இவை எங்கு ஒளிந்திக்கொள்ளும் என்று நம்மால் யூகித்துக்கூட பார்க்க முடியாது. இந்த இடம் உங்கள் வீட்டின் மூலை அல்லது ஏதேனும் பொருளாகவும் இருக்கலாம். எனவே, மழைக்காலத்தில் செருப்பு, ஷூ, ஹெல்மெட் போன்றவற்றை ஒருமுறை சரிபார்க்காமல் அணிந்து செல்லாதீர்கள். ஒரு சிறிய கவனக்குறைவு உங்கள் வாழ்க்கையை இழக்க நேரிடலாம். எனவே இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, அதில் நாகப்பாம்பு ஒன்று செருப்புக்கு அடியில் மறைந்துள்ளது நன்றாக தெரிகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள்!
இந்த வீடியோவானது இன்ஸ்டாகிராமில் (animal_lover_wagad) ஒரு கணக்கின் மூலம் வெளியிடப்பட்டது. இதன் தலைப்பில் "OMG" என்று எழுதப்பட்டுள்ளது. இந்த வைரல் வீடியோவில், பாம்பு ஒன்று புத்திசாலித்தனமாக செருப்புகளுக்கு அடியில் ஒளிந்து கொண்டிருப்பதை கிளிப்பில் காணலாம். அந்த நபர் செருப்பை அகற்றியவுடன், நாகப்பாம்பு அதன் பேட்டை விரித்து எழுந்து நின்று சீறத் தொடங்குகிறது. பாம்பை பார்த்தாலே தெரிகிறது அது கடும் கோபத்தில் உள்ளது என்று. இந்த வீடியோவைப் பார்த்த பிறகு, மழைக்காலங்களில் உங்கள் சாமான்களை சரிபார்க்காமல் ஏன் அணியக்கூடாது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். எனினும், இதுபோன்ற சம்பவம் அரங்கேறுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் ஹெல்மெட்டில் விஷப்பாம்பு இருந்ததை ஒருவர் பார்த்த சம்பவம் வெகுவளவில் வைரலானது.


இனி செருப்புகளை கணவித்து அணியுங்கள்
ஜூலை 2ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த வீடியோவுக்கு தற்போது 34,000க்கும் அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளது. அதே நேரத்தில், பயனர்கள் இது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்தும், தங்கள் எதிர்வினைகளையும் அளித்து வருகின்றனர். அதன் படி பயனர் ஒருவர் "நான் எப்போதும் பார்க்காமல் செருப்பு அணிவேன்" என்று எழுதினார். மற்றொருவர் "வீடியோவை வெளியிட்டதற்கு நன்றி, நீங்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்" என்று எழுதி இருந்தார். மற்றொரு பயனர் "நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும், உங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்" என்று எழுதினார்.


செருப்பின் கீழ் மறைந்திருந்த நாகப்பாம்பின் வீடியோவை இங்கே காணுங்கள்:



ஹெல்மெட்டுக்குள் பாம்பு



 


பொதுவாக ராச நாகம் என்பது தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் வசிக்கும் ஒரு பாம்பு இனம் ஆகும். இதுவே உலகில் மிக நீளமான நச்சுப்பாம்பு ஆகும். இது சுமார் 6.7 மீட்டர் (22 அடி) வரை வளரவல்லது. பொதுவாக அடர்ந்த காட்டுப்பகுதிகளிலேயே வாழும் இந்த வகை பாம்புகள், மற்ற பாம்புகளையே பெரும்பாலும் உணவாகக் கொள்கின்றன. இதன் நஞ்சின் கடுமை ஒரே கடியிலேயே ஒரு மனிதனைக் கொல்லவல்லது. 


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | அட்ரா சக்க.. என்னமா நீச்சல் அடிக்குது இந்த குரங்கு: வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ